78) மனிதர்களுக்கு அல்லாஹ் ஹராமாக்கியது என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
மனிதர்களுக்கு அல்லாஹ் ஹராமாக்கியது என்ன?
பதில் :
“வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்தச் சான்றையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்” எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் : 7 – 33