10) மனைவி, மக்கள் இல்லாத மகத்தான நாயகன்
நூல்கள்:
மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்
மனைவி, மக்கள் இல்லாத மகத்தான நாயகன்
اَنّٰى يَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ
அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?
எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திடவில்லை.
2:116➚ وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ سُبْحٰنَهٗ ؕ بَل لَّهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ
“அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.