10) சிறந்ததை தேர்வு செய்யுங்கள்
10) சிறந்ததை தேர்வு செய்யுங்கள்
நம்மிடம் உள்ளதில் எது மட்டமானதோ அல்லது எதை சாப்பிட நாம் விரும்ப மாட்டோமோ அத்தகைய பொருள்களை அண்டைவீட்டாருக்கு வழங்காதீர்கள்! நல்ல தரமான பொருள்களை வழங்குங்கள். நீங்கள் சாப்பிடுவது சாதாரணமான பொருளாக இருந்தால் அதை வழங்குவதில் தவறில்லை. அதே நேரத்தில் மட்டமான பொருட்களாக தேர்வு செய்து வழங்கக்கூடாது.
நம்பிக்கை கொண்டோரே நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள் கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! “தமக்கு விரும்பியதை தன் அண்டைவீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)