10) காணப்படுதல் கடவுளின் தன்மை அன்று
நூல்கள்:
இயேசு இறை மகனா?
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
(யோவான் 1:18)
‘கடவுள் என்பவர் எவராலும், எச்சந்தர்ப்பத்திலும் காணப்படக் கூடாது’ என்று பைபிள் கூறுகிறது.
இயேசுவைப் பல்லாயிரம் மக்கள் கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்பும் கூட அவரைச் சிலர் கண்டுள்ளனர். மரணிப்பதற்கு முன்னரும், மரணித்து உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு பலரால் காணப்பட்டுள்ளதால் இயேசு கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ இருக்க முடியாது என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகின்றது.