09) கருமியாக இருக்காதே

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

கருமியாக இருக்காதே

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ العِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا
ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலை நேரத்தை அடையும் போது இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர், இறைவா (நல்வழியில் செலவு செய்பவருக்குப் பிரதிபலனை அளிப்பாாயாக! என்று கூறுவார். மற்றொருவர் இறைவா் (நல்வழியில்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைக் கொடுப்பாயால் என்று கூறுவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர், அபூஹுரைரா ரலி

நூல்கள்.(புகாரி: 1442)

விளக்கம்: மனிதனிடம்   இருக்கும் செல்வம் படைத்தவனின் அருளால் கிடைத்ததாகும். இதை நல்வழியில் செலவழிப்பவதும், இல்லாதவர்களுக்கு வழங்குவதும் செல்வந்தவர்களின் மீது கடமையாகும். ஆனால் பண வசதி நிறைந்த பலர், இன்னும் சேர்க்க வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு சதவிகிதம் கூட ஏழைகளுக்காகச் செலவழிப்பதில் காட்டுவதில்லை. மற்றவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் தன்னைப் பற்றி நினைப்பவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்காது. இம்மையிலும் மறுமையிலும் அவருக்கு நஷ்டம் ஏற்படுத்துமாறு வானவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

“தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்” என்ற திருக்குர்ஆன் வசனமும் மறுமை வெற்றிக்கு தாராள மனம் அவசியம் என்பதை உணர்த்துகிறது நபியவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து அல்லாஹ்விடம் தாமும் பாதுகாவல் தேடி, மற்றவர்களையும் பாதுகாவல் தேட வலியறுத்தியுள்ளனர்.(புகாரி: 6365)எனவே கஞ்சத்தனத்திலிருந்து நம்மைப் பாதுகாத்து இறையருளை பெற முயற்சிப்போம்.