09) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-9

நூல்கள்: எச்சரிக்கையூட்டும் நபிமொழிகள்

09) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-9

நபிமொழி-41

உறவை பேணுவோம் 

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவை முறிப்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். 

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

(புகாரி: 5984)


நபிமொழி-42

பாதைக்குரிய உரிமை

 عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِيَّاكُمْ وَالجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ»، فَقَالُوا: مَا لَنَا بُدٌّ، إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا، قَالَ: «فَإِذَا أَبَيْتُمْ إِلَّا المَجَالِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا»، قَالُوا: وَمَا حَقُّ الطَّرِيقِ؟ قَالَ: «غَضُّ البَصَرِ، وَكَفُّ الأَذَى، وَرَدُّ السَّلاَمِ، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ، وَنَهْيٌ عَنِ المُنْكَرِ»

சாலைகளில் அமராதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அங்கு அமர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் கூடிப் பேசும் இடம் அதுதான்” என்று மக்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “பாதையில் கூடுவதை தவிர்க்க முடியாவிட்டால் பாதைக்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள் “பாதையின் உரிமை எது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், இடைஞ்சல் ஏற்படுத்தாமல் இருப்பதும் சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மையை ஏவி தீமையை தடுப்பதும் என்று பதிலளித்தார்கள்

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

(புகாரி: 2465)


நபிமொழி-43

ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே!

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். மக்களை ஆளும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளி. அவர்களை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்திற்கு பொறுப்பாளி அவர்களை பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளி அவர்களை பற்றி அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளி. அவன் அதை பற்றி விசாரிக்கப்படுவான். எச்சரிக்கை! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளி, உங்கள் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

(புகாரி: 2554)


நபிமொழி-44

பெரும் பாவங்கள் 

عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الكَبَائِرِ؟» ثَلاَثًا، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ – وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا فَقَالَ – أَلاَ وَقَوْلُ الزُّورِ»، قَالَ: فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا: لَيْتَهُ سَكَتَ

பெரும் பாவங்களை உங்களுக்கு நான் கூறட்டுமா” என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். மக்கள் ஆம், அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்” என்று சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும் பெற்றோருக்குத் துன்பம் தருவதும்” என்று கூறி, சாய்ந்திருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்துகொள்ளுங்கள்! பொய் சாட்சியமும் தான்” என்று கூறினார்கள். நிறுத்திக் கொள்ளக் கூடாதா! என்று நாங்கள் பேசும் அளவுக்கு அதை திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள்

அறிவிப்பவர்: அபூ பக்ரா (ரலி)

(புகாரி: 2654)


நபிமொழி-45

தஜ்ஜாலை குறித்து எச்சரிக்கிறேன்

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلاَ أُحَدِّثُكُمْ حَدِيثًا عَنِ الدَّجَّالِ، مَا حَدَّثَ بِهِ نَبِيٌّ قَوْمَهُ: إِنَّهُ أَعْوَرُ، وَإِنَّهُ يَجِيءُ مَعَهُ بِمِثَالِ الجَنَّةِ وَالنَّارِ، فَالَّتِي يَقُولُ إِنَّهَا الجَنَّةُ هِيَ النَّارُ، وَإِنِّي أُنْذِرُكُمْ كَمَا أَنْذَرَ بِهِ نُوحٌ قَوْمَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றி ஒன்றைச் சொல்லப் போகிறேன். வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்திற்கு அதைச் சொன்னதில்லை அவன் ஒற்றைக் கண் உடையவன் தன்னுடன் சொர்க்கத்தையும் நரகத்தையும் போன்று கொண்டு வருவான். அவன் சொர்க்கம் என்று சொல்வது நரகமாகும். நூஹ் (அலை) அவர்கள். அவனைக் குறித்து தன் சமுதாயத்தை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை எச்சரிக்கின்றேன். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 3338)