08) பாட்னா
08) பாட்னா.
வங்காள இராணுவப் பிரிவின் முக்கியத் தளமான தானாப்பூருக்கு அருகில் உள்ள ஊர். பாட்னா புரட்சியை ஒடுக்க நினைத்த டிவிஷன் கமிஷனர் வில்லியம் டைலர், முக்கிய புள்ளியைப் பிடித்து விட்டால் புரட்சிக்கு மூடு விழா நடத்தி விடலாம் என எண்ணினார். அதற்காக, பாட்னா போரை வழி நடத்திய போராளி மௌலவி. அலீ கரீமை உடனடியாகக் கைது செய்து சிறையிலடையுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அவர் எங்கிருந்து இயக்குகிறார் என்பதே தெரியவில்லை! பிறகெப்படி கைது செய்வது? அப்படியானால் அவரது சொத்துக்களை முடக்கி பறி முதல் செய்யுங்கள் என்றார். அலீ கரீமை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ரூபாய் 5,000 சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இவ்வாறு அரக்கப்பரக்க ஆணைகளிட்டும் அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியிலே முடிந்தன. கடைசிவரை ஆங்கிலேயரின் கண்ணில் படாமல், கலங்கவைத்து ஆட்டம் காட்டியவர் பாட்னா மௌலவி. அலீ கரீம். (விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு)வி.என். சாமி பக் 13-25).