07) தூய்மையான உழைப்பு

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

தூய்மையான உழைப்பு

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ، وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ، وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ، كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ، حَتَّى تَكُونَ مِثْلَ الجَبَلِ»

யார் தரய்மையான உழைப்பில் ஒரு போரிச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ – அல்லாஹ் தூய்மையானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை – அதை அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு உங்களின் குதிரைக் குட்டியை நீங்கள் வளர்ப்பக போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்:(புகாரி: 1410),(முஸ்லிம்: 1342)

விளக்கம்: மறுமையில் வெற்றி பெறுவதற்கு. தர்மம் செய்வது முக்கியமானதாகும். அந்தத் தர்மம் நல் உழைப்பின் மூலம் வந்த பொருளாக இருக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் நல்வழியில் உழைத்து அதன் மூலம் செய்யும் தர்மத்தை மட்டுமே ஏற்றுக் கொள்வான். ஹாராமான மார்க்கம் தடுத்த வழியில் சம்பாதித்துக் கொடுக்கும் தர்மம் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளமாட்டான்.

அதே நேரத்தில் ஹலாலான, மார்க்கம் அனுமதித்த வழியில் சம்பாதித்த பொருள் மிக மிகச் சிறியதாக இருந்தாலும் அதை அல்லாஹ் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு அதற்கு ஏராளமான நன்மைகளைப் பதிவு செய்கிறாள். எனவே மார்க்கம் அனுமதித்த வழியில் மட்டும் உழைத்து தர்மம் செய்து மறுமையில் வெற்றியடைவோம்