07) அல்லாஹ் ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்தது என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
07) அல்லாஹ் ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்தது என்ன?
கேள்வி :
அல்லாஹ்விடமிருந்து ஆதம் கற்றுக் கொண்டவை என்ன? அவை வானவர்களுக்கு தெரியாதா?
பதில் :
வானவர்களுக்கே தெரியாத பொருள்களின் பெயர்களை இறைவன் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்.
ஆதாரம் :
அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!” என்று கேட்டான். “நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்” என்று அவர்கள் கூறினர்.