06) நபிகாரின் நேசத்திற்குரியவர்
06) நபிகாரின் நேசத்திற்குரியவர்
நபிகாளார் உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டின் வழியாக கடந்து சென்றால், அவர்களின் வீட்டிற்கு சென்று ஸலாம் கூறி பேசிவிட்டு தான் செல்வார்ககளாம். அந்த அளவிற்கு அவர்களின் மீது பாசம் வைத்திருந்தார்கள்.
அனஸ் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை.
அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோது, ‘நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான் (ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்’ என்றார்கள்.
தன்னுடைய மனைவியின் வீட்டை தவிர, நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டிற்கு மட்டும் தான் செல்வார்கள் என்றால், நபிகளாரின் நேசத்திற்குரியவராக உம்மு சுலைம் (ரலி) அவர்கள் திகழ்ந்திருகிறார்கள் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.