06) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-6
06) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-6
நபிமொழி-26
சகோதரத்துவம்
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“விடைபெறும்” ஹஜ்ஜின்போது (உரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில்) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்!” என்று கூறிவிட்டு, “எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜரீர் (ரலி)
நபிமொழி-27
அல்லாஹ் சபிக்கும் செயல்கள்
“தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல்,மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்” என்று கூறினார்கள்.
அறிவப்பவர் : அலீ (ரலி)
நபிமொழி-28
விளையாட்டு வினையாகும்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும்.
அறிவப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)
(புகாரி: 7072),(முஸ்லிம்: 5103)
நபிமொழி-29
கோள் சொல்கிறவன்
அறிவப்பவர் : ஹுதைஃபா (ரலி)
நபிமொழி-30
உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு
நாம் இரவில் எழுந்து தொழுவது முதல் அனைத்து விதமான வணக்கங்களையும் செய்வதற்கான காரணமே அல்லாஹ்வின் உறவைப் பெறுவதற்காகத் தான். அதன் மூலம் அவனது அன்பை, உதவியைப் பெறுவதற்காகத் தான். நாம் உறவினரின் உறவைத் துண்டித்து விடும் போது அல்லாஹ்வின் அருள் அறுந்து போய் விடுகின்றது. அவனது உதவி துண்டிக்கப்பட்டு விடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றியது. அப்போது அல்லாஹ், “என்ன?” என்று கேட்டான். அதற்கு உறவு, “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரி நிற்கின்றேன்” என்று கூறியது. “உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு உறவு, “ஆம், என் இறைவா” என்று கூறியது. அல்லாஹ், “இது உனக்காக நடக்கும்” என்று கூறினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?” என்ற (47:22) வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)