05) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-5

நூல்கள்: அலட்சியம் செய்யப்படும் நபிமொழிகள்
05) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-5
நபிமொழி-21
பள்ளியில் நுழையும் போதும், வெளியேறும் போதும்
قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
“إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيَقُلْ: اللهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ، فَلْيَقُلْ: اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ “
பள்ளியில் நுழையும் போது

அல்லாஹும் மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்ம(த்)திக்க

(பொருள் : இறைவா உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக) என்றும்,

வெளியே வரும் போது

அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க மின் ஃபள்லிக்க

(பொருள் : இறைவா உன் அருட்கொடைகளை உன்னிடம் நான் வேண்டுகிறேன்) என்றும் சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபீ உஸைத் (ரலி)

(முஸ்லிம்: 1165)


நபிமொழி-22
காணாமல் போன பொருள்

காணாமல் போனதை பள்ளியில் அறிவிப்பதை கேட்டால் ‘அல்லாஹ் உங்கள் பொருளை உங்களுக்கு திரும்ப தரமாட்டேன்’ எனக் கூறுங்கள். பள்ளிவாசல் இதற்காக காட்டப்படவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 880)


நபிமொழி-23
நோன்புப் பெருநாள் தினத்தில்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يَغْدُو يَوْمَ الفِطْرِ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் சில பேரீச்சம் பழங்களை சாப்பிட பின்புதான் புறப்படுவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

(புகாரி: 953)


நபிமொழி-24

 

قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ، أَوْ أَمْسَيْتُمْ، فَكُفُّوا صِبْيَانَكُمْ، فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ، فَإِذَا ذَهَبَتْ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَخَلُّوهُمْ، وَأَغْلِقُوا الأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ بَابًا مُغْلَقًا»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவின் முற்பகுதி வந்து விட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் உங்கள் குழந்தைகளை தடுத்து வையுங்கள். ஏனெனில், அந்நேரத்தில் ஷைத்தான்கள் பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழித்து அவர்களை விட்டு விடுங்கள். மேலும், அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி கதவுகளைப் பூட்டி விடுங்கள். ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

(புகாரி: 3304)


நபிமொழி-25
பிறரை சிரமப்படுத்துதல்

பள்ளியில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருந்தார்கள். அப்போது குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டு திரையை அகற்றினார்கள். “நீங்கள் இறைவனிடம் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள். சப்தமிடுவதன் மூலம் பிறரை சிரமப்படுத்த வேண்டாம். ஓதும் போது உரக்க சப்தமிட்டு ஓத வேண்டாம்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி)

(அபூதாவூத்: 1135)