4) யார் இந்த பவுல்

நூல்கள்: இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

04) யார் இந்த பவுல்

நான்கு சுவிஷேசங்களைத் தொடர்ந்து மேலும் 23 அதிகாரங்கள் பைபிளில் உள்ளன. இவை அனைத்தும் பவுல் என்பவர் தனது சீடர்களுக்கும், திருச்சபைகளுக்கும் எழுதிய கடிதங்களாகும்.

இந்த பவுல் எழுதிய மடல்களில் தான் சிலுவைக் கொள்கையை பவுல் தானே உருவாக்கி அறிமுகப்படுத்துகிறார். இதற்கான ஆதாரங்களைப் பார்ப்பதற்கு முன் பவுல் என்பவர் யார் என்பதை முதலில் அறிந்து கொள்வது அவசியம்.

பவுல் என்பவரின் உண்மையான பெயர் சவுல் என்பதாகும். இவர் கிறித்தவ மக்களைக் கொடுமைப்படுத்தியதிலும், கொன்று குவித்ததிலும் முக்கியப் பங்காற்றியவர். இயேசு போதித்த ஒரு கடவுள் கொள்கையை அவரால் ஒழித்துக் கட்ட முடியவில்லை.  

எனவே தன்னைக் கிறித்துவ மதத்தில் இணைத்துக் கொண்டு மூன்று கடவுள் கொள்கையை இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி நுழைத்து அதில் வெற்றியும் பெற்றார்.

இதை பவுலே வாக்கு மூலமாகத் தருகிறார்.

முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதகாரம் பெற்று பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்.

அவர்கள் கொலை செய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன். சகல ஜெப ஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து தேவதுஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன். அவர்கள் பேரில் மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நியப் பட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.

இப்படிச் செய்து வருகையில் நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதகாரமும் உத்தரவும் பெற்று தமஸ்குவுக்குப் போகும் போது மத்தியான வேளையில் ராஜாவே! நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனே கூடப் பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன்.

நாங்களெல்லாரும் தரையிலே விழுந்த போது: சவுலே சவுலே நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய். முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.

அப்போஸ்தலர் 26:9-15

சவுல் வீடுகள் தோறும் நுழைந்து புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக் கொண்டு போய் காவலில் போடுவித்து சபையைப் பாழாக்கிக் கொண்டிருந்தான்.

அப்போஸ்தலர் 8:3

சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; . இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால் அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு வரும்படி தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.

அவன் பிரயாணமாய்ப் போய் தமஸ்குவுக்குச் சமீபித்த போது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.

அதற்கு அவன்: ஆண்டவரே நீர் யார் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.

அப்போஸ்தலர் 9:1-6

இயேசு எனக்குத் தரிசனம் தந்தார் என்று கூறி மக்களை நம்ப வைத்த பவுல் இயேசுவைப் புகழ்வதாகக் கூறிக் கொண்டே இயேசுவின் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்தார்.

தன்னைப் பொய்யன் என்று தானே வாக்கு மூலமும் கொடுத்தார் பவுல்.

நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.

நியாயப் பிரமாணமில்லாதவர் களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப் பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும் நான் தேவனுக்கு முன்பாக நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனா யிருக்கிறேன்.

பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.

1கொரிந்தியர்-9:19-23

அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன். அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிராகாமின் சந்ததியான்.

2கொரிந்தியர் 11:22

நான் ஆளுக்குத் தகுந்த மாதிரி நடித்து ஏமாற்றுபவன் என்று பவுலே ஒப்புக் கொண்ட பின் அவர் உருவாக்கிய கொள்கையை இயேசுவின் கொள்கை என்று கிறித்தவ மக்கள் நம்புவது தான் ஆச்சரியமாக உள்ளது.

மத்தேயு, மாற்கு, யோவான், லூக்கா ஆகிய நான்கு பேர் சுவிஷேசங்களை எழுதினார்கள். அது போல் சுவிஷேசத்தில் பங்காளியாவதற்காகவே புதுக் கொள்கையை உண்டாக்கியதாகவும் பவுல் ஒப்புக் கொள்கிறார்.

இன்னும் அவர் சொல்வதைக் கேளுங்கள்!

நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக் கூடாது; சொல்லக் கூடுமானால் தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?

அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? நன்மை வரும்படிக்குத் தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா?

நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.

ரோமர் 3:5-8

இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத இக்கொள்கையைக் கிறித்தவர்கள் மத்தியில் இவர் பிரச்சாரம் செய்த போது பவுல் கூறுவது பொய் என்று மக்கள் தூஷித்துத் தூற்றினார்கள். அதற்கு மறுப்புச் சொல்லப் புகுந்த பவுல் நான் பொய்யன் இல்லை என்றுதானே மறுக்க வேண்டும். அப்படி பவுல் மறுக்கவில்லை.

மாறாக நான் பொய் தான் சொல்கிறேன்; ஆனாலும் அந்தப் பொய்யினால் தேவனுக்கு மகிமை ஏற்படுவதால் இந்தப் பொய்யான கொள்கையைச் சொல்வது தவறானது அல்ல என்பது தான் பவுலின் பதில். மேற்கண்ட வசனங்களில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

இயேசுவின் கொள்கையைச் சொன்னால் மக்களிடம் எடுபடாது. இரத்தம் சிந்தியதை வைத்து ஒரு கொள்கையை உருவாக்கினால் அது நன்றாக எடுபடும்; அதிக மக்கள் சேருவார்கள் என்பதற்காகவே இந்தக் கொள்கையை பவுல் உண்டாக்கினார்.

இன்றும் கூட கிறித்தவ மத குருமார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள் என்று பொது இடங்களில் நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றுவதற்குக் கடவுளுக்காக பொய் சொல்லலாம் என்ற பவுல் கொள்கையே காரணம்.

பவுல் கூறுவது வேதத்துக்கும் இயேசுவுக்கும் எதிரானது என்று பண்டிதர்கள் அன்றைக்கே கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பவுல் சொல்லும் பதில் இது தான்.

எப்படியெனில் நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.

ரோமர் 7:15

எனக்கே விருப்பமில்லை தான்; ஆள் பிடிக்க வேண்டுமானால் இரத்ததைக் காட்டி பச்சாதாபம் தேடுவது தான் உதவும் என்பதற்காக எனக்கே விருப்பமில்லாத ஒன்றைப் பிரச்சாரம் செய்கிறேன் என்று ஒப்புக் கொள்கிறார்.

பின்பு அவன் போஜனம் பண்ணிப் பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சில நாள் இருந்து தாமதமின்றி கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.

அப்போஸ்தலர் 9:21

இயேசு மரணித்த பின் உயிர்த்தெழுந்தார் என்ற கொள்கையை உண்டாக்கியதே நான் தான் எனவும் தனது மகன் தீமேத்தயூவுக்கு எழுதிய அறிவுரையில் குறிப்பிடுகிறார் பவுல்.

தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசு கிறிஸ்து என் சுவிசேஷத்தின்படியே மரித்தோரிலிருந்தெழுப்பப் பட்டவரென்று நினைத்துக் கொள்.

இரண்டாம் தீமேத்தயூ 2:8

இயேசு மரித்து விட்டு உயிர்த்தெழுந்தார் என்பதை நான் தான் உருவாக்கினேன். இயேசுவுக்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று பவுல் தெள்ளத் தெளிவாக ஒப்புக் கொண்ட பிறகும் இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத இக்கொள்கையை கிறித்தவர்கள் நம்புவது ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

இன்னும் பவுல் சொல்வதைக் கேளுங்கள்

என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்;. என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.

2கொரிந்தியர் 11:1

பின்னும் நான் சொல்லுகிறேன்;. ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ண வேண்டாம்;. அப்படி எண்ணினால் நானும் சற்றே மேன்மை பாராட்டும்படி என்னைப் புத்தியீனனைப் போலாகிலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

2கொரிந்தியர் 11:16

அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம் புத்தியீனமாய்ப் பேசுகிறேன். நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன். அதிகமாய் அடிபட்டவன் அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன். அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.

2கொரிந்தியர் 11:23

ஒருவர் செய்த பாவத்துக்காக அவரது சந்ததிகள் பாவிகளாகப் பிறக்கிறார்கள் என்பதும், அந்தப் பாவத்துக்காக இயேசு தன்னைத் தானே சிலுவையில் பலியாக்கிக் கொண்டார் என்பதும் அறிவுக்குச் சம்மந்தமில்லாத கருத்து என்று பவுலுக்குத் தெரிகிறது.

இப்படி ஒரு கருத்தைக் கூறுபவன் புத்தியீனன் அதாவது முட்டாள் என்பதும் அவருக்குப் புரிகிறது. ஆனாலும் எனக்கு முட்டாள் பட்டம் சூட்டினாலும் பரவாயில்லை; என் கருத்தை ஏற்றுக் கொள்ளு7ங்கள் என்று மன்றாடுவது மேற்கண்ட வசனங்களில் தெளிவாகத் தெரிகிறது.

உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப் பெற்று அவர்களைக் கொள்ளையிட்டேன்.

2கொரிந்தியர் 11:8

யூதர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு உங்களுக்கு ஊழியம் செய்தேன் என்று கூறுவதன் மூலம் இயேசுவின் கொள்கையை அழித்து ஒழிக்க இவரை யூதர்கள் சம்பளம் கொடுத்து நியமித்திருக்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.

அல்லது யூதர்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு அவர்களுக்குத் துரோகம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. இரண்டில் எது உண்மையானாலும் இவர் நம்பகமானவர் அல்ல. பொய்யும் புரட்டும் துரோகமும் தான் இவரது குனம் என்பது உறுதியாகிறது.

இத்தகைய ஒருவர் உருவாக்கிய கொள்கையை ஏற்று இயேசு போதித்த கொள்கையை விடுவது தான் இயேசுவுக்குச் செய்யும் மரியாதையா என்பதைக் கிறித்தவ அன்பர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரே இறைவனை வணங்க வேண்டும்; அவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று இயேசு போதித்திருக்க அதை ஒழித்துக் கட்டியதோடு பவுல் நின்று விடவில்லை. கர்த்தர் சொன்ன பல கோட்பாடுகளை இவர் துணிந்து மாற்றினார்.

சில உதாரணங்களைப் பார்ப்போம்

விருத்த சேதனம்

ஆண்கள் கட்டாயம் விருத்த சேதனம் செய்ய வேண்டும் என்று வேதம் சொல்கிறது. இயேசுவும் விருத்த சேதனம் செய்யப்பட்டார். ஆனால் பவுல் அவசியம் இல்லை என்கிறார்.

எனக்கும் உங்களுக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும் நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால் உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்

ஆதியாகமம்-17:10

உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

ஆதியாகமம்-17:11

எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்த சேதனம் பண்ணப்படக் கடவது. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும் அப்படியே விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.

ஆதியாகமம்-17:12

உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும் விருத்தசேதனம் பண்ண வேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக் கடவது.

ஆதியாகமம்-17:13

நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால் அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான் என்றார்.

ஆதியாகமம்-17:14

எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படக் கடவது.

லேவியராகமம்-12:3

பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ண வேண்டிய எட்டாம் நாளிலே அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

லூக்கா-2:21

விருத்த சேதனம் செய்வது கட்டாயக் கடமை எனவும் கடவுள் மனிதனுக்கு இட்ட கட்டளை எனவும், கடவுளிடம் மனிதன் செய்து கொண்ட ஒப்பந்தம் எனவும் தலை முறை தலைமுறையாக இது நடைமுறைப்படுத்த வேண்டியது எனவும், இது எக்காலத்திலும் மாற்றப்படக் கூடாது எனவும் வேதம் மிகத் தெளிவாகச் சொல்கிறது. மேலும் இயேசுவும் விருத்த சேதனம் செய்யப்பட்டார் எனவும் பைபிள் கூறுகிறது.

ஆனால் பவுல் சொல்வதைப் பாருங்கள்!

விருத்த சேதனமும் ஒன்றுமில்லை விருத்த சேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.

1-கொரிந்தியர் 7:19

இதோ நீங்கள் விருத்த சேதனம் பண்ணிக் கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கலாத்தியர் 5:2

இயேசு சொன்னதையும் கடவுள் சொன்னதையும் கேட்காமல் என் சொல்லைக் கேளுங்கள் என்று கூறும் ஒருவர் வகுத்த கொள்கை எப்படி நம்பகமானதாக இருக்கும் என்பதையும் கிறித்தவ அன்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இஸ்ரவேலருக்கு மட்டும்

இயேசுவும் இன்னும் பல தீர்க்கதரிசிகளும் தத்தமது இனத்துக்காக அனுப்பப்பட்டனர். இயேசு அனுப்பப்பட்டது உலக மக்களுக்காக அல்ல. இஸ்ரவேல் என்ற ஒரு இனத்துக்காகவே அனுப்பப்பட்டார்.

ஆனால் அதை மீறி அதை எதிர்த்து இஸ்ரவேல் அல்லாதவர்களுக்கும் நான் பிரச்சாரம் செய்வேன் என்று பவுல் மாற்றம் செய்தார். இயேசுவின் போதனைக்கு மதிப்பில்லாமல் ஆக்கினார்.

அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி மற்றப்படியல்ல வென்றார்.

அவள் வந்து: ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள்: மெய் தான் ஆண்டவரே ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

மத்தேயு 15:22-28

இஸ்ரவேலர்களுக்குப் பிரச்சாரம் செய்யும் அதிகாரம் மட்டுமே தனக்கு உள்ளது என்றும் மற்றவர்களுக்கு அல்ல என்றும் இயேசு கூறியதை மத்தேயு கூறுவது போலவே மற்ற மூன்று சுவிஷேசங்களும் கூறுகின்றன.

இயேசு தனது சீடர்களுக்கும் இதையே கட்டளையாகப் பிறப்பித்தார். இஸ்ரவேல் இனத்தில் இருந்த பன்னிரண்டு கோத்திரத்தாருக்கு மட்டும் பிரச்சாரம் செய்யுமாறு தான் கட்டளையிட்டார்.

நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம் பண்ணி இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின் மேல் உட்காருவீர்கள் என்றார்.

லூக்கா- 22:30

அதற்கு இயேசு: மறு ஜென்ம காலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது என்னைப் பின்பற்றின நீங்களும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 19:28

காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

மத்தேயு 10:6

இஸ்ரவேல் அல்லாத மக்களுக்கு கிறித்தவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று இயேசு சொல்லி இருக்க அவரது சீடர்களும் அவ்வாறே வழி நடந்திருக்க பவுல் தான் இதையும் மாற்றியதாக வாக்கு மூலம் தருகிறார்.

அதனடிப்படையில் தான் பாதிரிகளும் செயல்பட்டு வருகின்றனர்.

அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவ வசனத்தைச் சொல்ல வேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால் இதோ நாங்கள் புற ஜாதியாரிடத்தில் போகிறோம்.

அப்போஸ்தலர் நடபடிகள் 13:46

இஸ்ரவேல் மக்கள் தவிர மற்றவர்களுக்கு தனது கொள்கையைப் பிரச்சாரம் செய்வதை அடியோடு இயேசு மறுத்திருக்கும் போது, இஸ்ரவேலர்கள் ஆடுகள் எனவும், மற்ற சாதியினர் நாய்கள் எனவும் கூறி இருக்கும் போது இயேசுவின் வழிகாட்டுதலை மீறுவது எப்படி கிறித்தவமாகும்? இது எப்படி இயேசுவை மதித்ததாக ஆகும்?

ஒரே கடவுள் என்ற கொள்கையும் முக்கடவுள் கொள்கையும் இயேசுவும் அவருக்கு முன்னர் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளும் கடவுள் ஒரே ஒருவர் தான் என்ற கொள்கையைப் போதித்தனர். இந்தக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்தவரும் பவுலடிகள் தான். கடவுள் குறித்து கடவுள் கூறுவதையும் இயேசு உள்ளிட்ட தீர்க்கதரிசிகள் கூறுவதையும் சிந்தியுங்கள்.

பவுல் உண்டாக்கிய இன்றைய போலிக் கிறித்தவத்துக்கும் அதற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா என்றும் சிந்தித்துப் பாருங்கள்!

ஆகையால் உயர வானத்திலும், தாழ பூமியிலும் கர்த்தரே தேவன். அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து

உபகாமம் 4:39

இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது.

நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக் கொள்கிற போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்துப் பேசி

உபாகமம் 6:4-7

நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத் தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.

ஏசாயா 44:6

எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை. எனக்குப் பின் இருப்பதுமில்லை. நான், நானே கர்த்தர். என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. நானே அறிவித்து இரட்சித்து, விளங்கப் பண்ணினேன். உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை. நானே என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 43:10-12

வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

ஏசாயா 45:18

நானே கர்த்தர். வேறொருவர் இல்லை. என்னைத் தவிர தேவன் இல்லை. என்னைத் தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன். நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

ஏசாயா 45:5,6

நானே தேவன். வேறொருவரும் இல்லை. நானே தேவன். எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற் கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலை நிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி

ஏசாயா 46:9,10

என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

யாத்திராகமம் 20:3

கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு இது உனக்குக் காட்டப்பட்டது.

உபாகமம் 4:35

இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும் உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது.

உபாகமம் 6:4-6

நானே தேவன்; வேறொருவரும் இல்லை; நானே தேவன்; எனக்குச் சமானமில்லை

ஏசாயா 46:9

என்று கர்த்தர் கூறினார்.

“நானும் கடவுள்’ என்று கர்த்தர் கூறினால் இயேசுவையும் கடவுள் என்று கிறித்தவர்கள் நம்புவதில் நியாயமிருக்கும்.

“நானே – நான் மட்டுமே – கடவுள்” என்ற பைபிளின் இவ்வசனங்கள் இயேசு உள்ளிட்ட எவரும் கடவுளாக முடியாது என்பதைக் கூறுகின்றது.

எனக்கு இணையில்லை; நிகரில்லை என்ற சொற்கள் இன்னும் இதை அழுத்தமாகக் கூறுகிறது. இதற்கு முரணாக இறைமகன் என்ற சொல்லுக்கு விளக்கம் தருவது பைபிளுக்கே முரணாகத் தோன்றவில்லையா?

அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார்.

மத்தேயு 4:10

ஒரு கடவுளைத் தவிர மற்றவர்களை வணங்குவோர் சாத்தான்கள் என்பது இயேசுவின் இந்த வார்த்தையிலிருந்து தெரிகின்றது.

இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான்

மத்தேயு 6:24

இரண்டு எஜமானர்களுக்கே ஊழியஞ் செய்ய முடியாது என்று இயேசு கூறியிருக்க கிறித்தவர்கள் இரண்டு அல்லது மூன்று கடவுள்களுக்கு உழியஞ்செய்ய முடியும் என்று நம்பலாமா?

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால் நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின் படி செய்கிறவன் எவனோ அவனே கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பாவான்.

பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின் படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதின போது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

மத்தேயு 7:21-27

மூடர்களுக்கும் விளங்கும் வகையில் இயேசு செய்த இந்த போதனையைக் கிறித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா? இயேசுவே என்றழைத்து அவரைக் கடவுளாக்கியதன் மூலம் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க இயலாமல் போவதைத் தான் அவர்கள் விரும்புகிறார்களா?

குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர் கேட்கிறார்கள் என்று கூறி இயேசுவைக் கடவுளாக்குவோர் அக்கிரமக்காரர்கள் என்றும், ஏமாற்றுக்காரர்கள் என்றும் இயேசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருப்பதை அவர்கள் உணர மாட்டார்களா?

ஒரே கடவுளாகிய கர்த்தரை – கர்த்தரை மட்டுமே – வணங்கி, வழிபட்டு கற்பாறையின் மீது தங்கள் கட்டிடத்தை எழுப்ப வேண்டாமா? ஆண்டவரே! என்று இயேசுவை அழைத்து மணல் மீது வீடு கட்டுவது மதியீனமாக அவர்களுக்குத் தோன்றவில்லையா?

தங்களின் பெற்றோர்களும் தங்களின் மதகுருமார்களும் இயேசுவைப் பற்றியும் அவர் போதித்த இலட்சியம் பற்றியும் தவறாகத் தங்களுக்குப் போதித்துத் திசை திருப்பி விட்டனர் என்பது இந்த வசனங்களிலிருந்து கிறித்தவர்களுக்கு உண்மையாகவே தெரியவில்லையா? சிந்தித்துப் பாருங்கள்.

அந்த நாளையும், அந்த நாழிகைகயையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான். பரலோகத்திலிருக்கிற தூதர்களும் அறியார்கள். குமாரனும் கூட அறியார்.

மத்தேயு 26:36

போதகரே! நியாயப் பிரமாணத்தில் எந்தக் கற்பனை பிரதானமானதென்று கேட்டான். இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனத்தோடும் அன்பு கூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை.

மத்தேயு 22:36-38

இந்தப் பிரதானமான கொள்கை கிறித்தவர்களிடம் இன்றைக்கு இருக்கிறதா? பிரதானமான இந்தக் கொள்கையைக் கைவிட்டு விட்டு எந்த அடிப்படையில் தங்களைக் கிறித்தவர்கள் என்கிறார்கள்?

அப்பொழுது செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடு கூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்து கொண்டு, உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ண வேண்டும் என்றாள். அவர் அவளை நோக்கி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அவள் உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும் என்றாள். இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக் கொள்கிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? என்றார்.

அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

மத்தேயு 20:20-23

ஒரே கடவுளை வணங்க வேண்டும் என்று மக்களுக்குப் போதிக்கவே இயேசு வந்திருக்கிறார். தம்மைக் கடவுள் என்று வாதிட வரவில்லை. சர்வ அதிகாரமும் ஏக இரட்சகனாகிய கர்த்தருக்கு மட்டுமே உரியது என்று போதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதை இந்த வசனங்களிலிருந்து அறியலாம்.

இவற்றுக்கு முரணாக முக்கடவுள் கொள்கையை உருவாக்கியவர் பவுல் என்பதை அனைவரும் அறிவர். அவர் கூட தன்னையுமறியாமல் அந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்.

ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறார்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமேன்.

தீமோத்தேயு 6:16

மேலும் இயேசு பல்வேறு சந்தர்ப்பங்களில் முழங்கிய கொள்கைப் பிரகடனத்தைப் பாருங்கள்! நான் கடவுளால் அனுப்பப்பட்ட தூதனே தவிர கடவுள் இல்லை என்று தெளிவுபடக் கூறுகிறார்.

என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்கிறேன் என்றார்.

யோவான் 8:26

நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

யோவான் 8:28

ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன். நான் செய்யும் படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.

யோவான் 17:3,4

அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.

மார்க்கு 13:32

இவை யாவும் புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிஷேசங்களும் கூறும் உண்மை.

இவைகளையெல்லாம் கிறித்தவர்கள் அலட்சியம் செய்தால் இந்த வேதத்தில் அவர்களுக்கே நம்பிக்கையில்லை என்பதைத் தவிர வேறு என்ன பொருள்? பரலோக ராஜ்ஜியத்தில், இந்தப் போதனைகளை மீறியதற்காக கர்த்தர் விசாரணை செய்தால் கிறித்தவர்கள் என்ன பதில் கூறுவார்கள்? சிந்தித்துப் பாருங்கள்!

ஆகாய மண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?

சங்கீதம் 89:6

ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.

சங்கீதம் 86:8

நீர் ஒருவரே தேவன்.

சங்ககீதம் 86:10

நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.

சங்கீதம் 113:5,6

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே! மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை.

முதலாம் ராஜாக்கள் 8:23

அங்கே காணாமலும் கேளாமலும் சாப்பிடாமலும் முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனுஷர் கைவேலையாகிய தேவர்களைச் சேவிப்பீர்கள். அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவானகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும் போது, அவரைக் கண்டடைவாய்.

(உபாகமம் 4:28-29)

தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து இரட்சிக்க மாட்டாத தேவனைத் தொழுது கொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள். நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனை பண்ணுங்கள். இதைப் பூர்வ கால முதற்கொண்டு விளங்கப் பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ?

நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத் தவிர வேறொருவரும் இல்லை. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே! என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும்.

நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறேன். இந்த ரீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.

ஏசாயா 45:20-23

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணார். அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.

ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்? இதோ அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள். தொழிலாளிகள் நரஜீவன்கள் தானே; அவர்கள் எல்லோரும் கூடி வந்து நிற்கட்டும்; அவர்கள் ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுவார்கள்.

ஏசாயா 44:9-11

இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான். தட்டான் பொன் தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்

ஏசாயா 40:18,19

விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

லேவியராகமம் 19:4

நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும் பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

லேவியராகமம் 26:1

உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.

நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

யாத்திராகமம் 20:2-5

நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்து கொள்ளாமலும், சேவியாமலும் அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும் அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப் போடுவாயாக. உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக் கடவீர்கள்!

யாத்திராகமம் 23:24,25

விக்கிரகத்தை உடைத்துப் போடுமாறு கடவுள் இட்ட கட்டளைக்கு தமது செயல் மாற்றமாக இருப்பது கிறித்தவ நண்பர்களுக்குத் தெரியவில்லையா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள். அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து அது அசையாத படிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.

அவைகள் பனையைப் போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேச மாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்பட வேண்டும். அவைகளுக்குப் பயப்பட வேண்டாம்;

அவைகள் தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தாவே உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.

ஏரேமியா 10:3-6

சிலுவையையும், இயேசுவையும், அவரது தாயாரையும் உருவங்களாக்கி அவற்றைக் கடவுள்கள் என்று எண்ணி வழிபட்டு, பைபிளின் இந்தப் போதனைகளைப் புறக்கணிப்போர் தங்களைக் கிறித்தவர்கள் என்று கூறிக் கொள்ள அருகதை உள்ளவர்கள் தாமா?

பைபிளைத் தூக்கி எறிந்து விட்டு தங்கள் பாதிரிமார்கள் கூறிய திரித்துவம் (முக்கடவுள் கொள்கை) எனும் கொள்கையை ஏற்கலாமா?

கர்த்தர் வகுத்தளித்த இந்த உன்னதமான கொள்கையை மாற்றி அமைத்து முக்கடவுள் கொள்கையை உருவாக்கியவர் பவுல் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதையும் கிறித்தவ அன்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.