04) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-4
04) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-4
நபிமொழி-16
சத்தியம் செய்தல்
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «مَنْ كَانَ حَالِفًا، فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ»
‘சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி)
(புகாரி: 2679)
நபிமொழி-17
கடமையான குளிப்பு
عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي المَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ المَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ »
கடமையான குளிப்பின் போது நபி (ஸல்) அவர்கள் கைகள் இரண்டையும் முதலில் கழுவுவார்கள். பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று செய்வார்கள். பிறகு விரல்களைத் தண்ணீருக்குள் நுழைத்து முடிகளைக் கோதி விடுவார்கள். பிறகு தலையின் மீது மூன்று முறை தண்ணீரை ஊற்றுவார்கள். பிறகு உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(புகாரி: 248)
நபிமொழி-18
பயணத்தின் போது
عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدَانِ السَّفَرَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا، فَأَذِّنَا، ثُمَّ أَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا»
பயணம் புறப்பட இருந்த இருவரிடம் நபி (ஸல்) அவர்கள், உங்கள் பயணத்தில் தொழுகைக்கு பாங்கு சொல்லி இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் தொழுவிக்கட்டும்!” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : மாலிக் (ரலி)
(புகாரி: 630)
நபிமொழி-19
தாயத்து, தகடு
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தாயத்தை தொங்கவிடுபவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டார்.
அறிவிப்பவர் : உக்பா (ரலி)
(அஹ்மத்: 16781)
நபிமொழி-20
உளூச் செய்யும் போது…
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ، ثُمَّ لِيَنْثُرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ،
وَإِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூச்செய்பவர் மூக்கை தண்ணீர் செலுத்தி சிந்தட்டும். (மல ஜலத்தை) கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உறக்கத்தில் இருந்து விழிப்பவர் உளூ செய்யும் பாத்திரத்தில் கையை விடும் முன் கையை கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால் (உறங்கும்போது) தமது கை எங்கே இருந்தது என்பதை அவர் அறியமாட்டார்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
(புகாரி: 162)