03) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-3
03) எச்சரிக்கையூட்டும் நபிமொழி-3
நபிமொழி-11
ஒட்டுமுடி வைத்துக் கொள்வது
இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
(புகாரி: 1330),(முஸ்லிம்: 922)
நபிமொழி-13
தடைசெய்யப்பட்டவைகள்
நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்குப் பெறுகிற கூலியை)யும் தடை செய்தார்கள்; பச்சை குத்துவதையும், பச்சை குத்திக் கொள்வதையும் தடை செய்தார்கள்; வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்)
நபிமொழி-14
அல்லாஹ் வேதனை செய்வான்
“இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹிஷாம் பின் ஹகீம்
நபிமொழி-15
குதிங்கால்களைச் சரியாகக்
கழுவாதவர்களுக்கு நரகம்
‘நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம்.
(அதைக் கண்டதும்) ‘குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!’ என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)