02) பதிப்புரை

நூல்கள்: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

02) பதிப்புரை

எல்லாப் புகழும் ஒருவனுக்கே !

மாணவ மானவியர்களுக்கு இஸ்லாத்தை பற்றி சரியாகக் கற்பிக்காததால் நமது முஸ்லிம் குழந்தைகளில் பெரும் தொகையினர் தவறான காரியங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

பள்ளிப் பருவத்திலையே இஸ்லாத்தை பற்றி சரியான முறையில் கற்பித்துவிட்டால் அவர்கள் பெரியவனாகி வரும் போது இஸ்லாமிய விஷயங்களை தெரிந்தவர்களாகவும், இஸ்லாத்தை பின்பற்றக்கூடியவனாகவும் மாறிடுவான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை .

பச்சிளம் பாலகரும், பெரியவர்களும் மிக இலகுவாக புரிந்து கொள்ளும் விதமாக திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில் என்ற நூலை வெளியிடுகிறோம்.

இந்நூல் மாணவ மனவியர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

இதனை பயிற்ருவிக்கும் ஆசியர்கள் மாணவ மாணவியர்களுக்கு நாள்தோறும் ஒன்று அல்லது இரண்டு கேள்வி பதில்களை மனனனம் செய்வதால் அவைகள் இஸ்லாத்தை பற்றி முழுவதும் தெரிந்து கொள்வார்கள்.

இன்ஷா அல்லாஹ்

இந்நூல் சிறுவர்களுக்கு மட்டும் பயனுள்ளதல்ல. பெரியவர்களுக்கும் இதைப் படித்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்நூல் வெளியிடப்படுகிறது .

அல்ஹம்துலில்லாஹ்.