03) சொர்க்கதிர்குரிய பெண்மணி
03) சொர்க்கதிர்குரிய பெண்மணி
முதன் முதலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுவனத்தில் உள்ளே நுழையும் போது உம்மு சுலைம் (ரலி) அவர்களைப் பார்கிறார்கள். அதன் பிறகு பிலால் (ரலி) காலடி ஓசையை கேட்கிறார்கள். அடுத்தபடியாக உமர் (ரலி) மாளிகையை பார்கிறார்கள்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், ‘நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன்.
அப்போது நான் மெல்லிய காலடி யோசையைச் செவியுற்றேன். உடனே, ‘யார் அது?’ என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), ‘இவர் பிலால்’ என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், ‘இது யாருக்குரியது?’ என்று கேட்டேன்.
அவர், (வானவர்), ‘இது உமருடையது’ என்று கூறினார். எனவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (எனவே, அதில் நுழையாமல் திரும்பிவிட்டேன்)’ என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்’ என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களால் ‘சுவனத்துப் பெண்’ எனச் சிலாகித்துச் சொல்லப்பட்ட உம்மு சுலைம் (ரலி) அவர்கள் எந்த அளவுக்கு கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை பின்வரும் சம்பவம் மூலம் அறிந்து கொள்ளலாம்.