02) கண்ணிப்படுத்துங்கள்
நூல்கள்:
அண்டை வீட்டார் உரிமைகள்
02) கண்ணிப்படுத்துங்கள்
நம் வீட்டில் விசேஷங்கள் ஏதும் நிகழ்ந்தால் முதலில் அண்டைவீட்டாருக்கு அழைப்புக் கொடுத்து அவர்களை கண்ணியப்படுத்தவேண்டும் பிரச்சனைகளால் சண்டையிட்டுக் கொண்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் வரும் போது, ஊர் முழுக்க அழைப்பு கொடுப்பவர்கள் பக்கத்துவீட்டில் இருப்பவர்களுக்கு அழைப்பு கொடுப்பதில்லை கொடுத்தாலும்கூட மரியாதை கலந்த அழைப்பாக இருப்பதில்லை நபிகளார் அவர்கள் இது போன்று நடப்பவர்களுக்கு பின்வருமா கட்டளையிடுகிறார்கள் :
قَالَ: سَمِعَتْ أُذُنَايَ، وَأَبْصَرَتْ عَيْنَايَ، حِينَ تَكَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ
«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ،
அபூ ஷுரைஹ் அல்அதனீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள்:(புகாரி: 6019),(முஸ்லிம்: 77)