02) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-2
நூல்கள்:
அலட்சியம் செய்யப்படும் நபிமொழிகள்
02) அலட்சியம் செய்யப்படும் நபிமொழி-2
நபிமொழி-06
பள்ளியில் நுழைந்தால்…
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «إِذَا دَخَلَ أَحَدُكُمُ المَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ»
பள்ளியில் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத் தொழுது கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)
(புகாரி: 444)
நபிமொழி-07
சகோதரத்துவம்
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ، يَلْتَقِيَانِ: فَيَصُدُّ هَذَا وَيَصُدُّ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ ”
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்க அனுமதி இல்லை. இருவரும் சந்திக்கும் போது முகம் திருப்பிக் கொள்ளக் கூடாது. இருவரில் முதலில் சலாம் சொல்பவரே சிறந்தவர்.
அறிவிப்பவர் : அபூஅய்யூப் (ரலி)
(புகாரி: 6237)
நபிமொழி-08
பள்ளியில் வியாபாரம் செய்தல்
பள்ளியில் விற்பவரையோ வாங்குபவரையோ பார்த்தால் அல்லாஹ் உங்கள் வியாபாரத்தில் நஷ்டத்தை ஏற்படுத்துவான்’ என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(திர்மிதீ: 1242)
நபிமொழி-09
பயணத்திலிருந்து திரும்பும்போது
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَطْرُقَ أَهْلَهُ لَيْلًا»
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
(புகாரி: 1801)
நபிமொழி-10
கொட்டாவி
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ التَّثَاؤُبُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا قَالَ: هَا، ضَحِكَ الشَّيْطَانُ
கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருகிறது. கொட்டாவி வந்தால் முடிந்த வரை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், அப்போது ‘ஆ’ என்று சொன்னால் ஷைத்தான் சிரிக்கின்றான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
(புகாரி: 3289)