01) பதிப்புரை
பதிப்புரை
இறைவன் நமக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியிருக்கின்றான். அவன் நமக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகளில் இஸ்லாம் என்பது உன்னதமான ஓர் அருட்கொடை நாமெல்லாம் இறையருளின் காரணத்தாலே முஸ்லிம்களாக இருக்கின்றோம். இல்லையெனில் நாமும் ஏதேனும் கல்லை வணங்கி கொண்டிருப்பவர்களாகவோ அல்லது பல கடவுள் கொள்கை கொண்டவர்களாவோ இருந்திருப்போம். நரக நெருப்பிலிருந்து நம்மை காப்பாற்றக்கூடிய இஸ்லாம் எனும் பொக்கிஷம் ஒரு நிகரற்ற அருட்கொடையே
இஸ்லாத்திற்கு பிறகு அருட்கொடையாக இறைவன் நமக்கு தந்திருக்கின்ற நாவை குறிப்பிடலாம்.
அவனுக்கு இரண்டு கண்களையும் நாவையும் இரு உடுடுகளையும் நாம் அமைக்கவில்லையா?
இறைவன் நமக்களித்த அருட்கொடைகளையும் சரியான முறையில் பேண வேண்டும். அவ்வாறு பேணுவதே நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முறையாகும்.
ஒருவர் ஒரு அழகான பொருளை நமக்கு அன்பளிக்கின்றார். அதை பயன்படுத்த வேண்டிய முறையில் பயன்படுத்தினால் தான் அவர் அன்பளிப்பு தந்ததற்கு அர்த்தமாகும். அதையே பாவ காரியத்திற்கு பயன்படுத்தினால் இறைவனிடத்தில் பதில் சொல்லியாக ஈவேண்டும். அது போலவே இறைவன் நமக்கு பதந்திருக்கின்ற நாவை நன்மையான காரியங்களுக்காகவே பயன் படுத்திக் கொள்ள வேண்டும். தீமையான காரியங்களை விட்டும் நமது நாவை நாம் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் இறைவனின் கடும் விசாரணையிலிருந்தும் தண்டனையிலிருந்தும் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை
நம்முடைய நாவிற்கும் விசாரணை உண்டு என்பதை இந்த வசனம் சந்தேகத்திற்கிடமின்றி தெரிவிக்கின்றது எனவே தான் நம்முடைய நாவை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும். பாதுகாக்க தவறினால் நம் மறுமை நிலை என்ன என்பதை விளக்குவதற்கான சிறுமுயற்சியாக இந்நூலை வெளியிடுகின்றோம். இறைவன் இந்நூலின் நோக்கத்தை முற்றிலும் நிறைவேற்றி அளப்பரிய கூலியை வழங்குவானாக.
மக்களை சொர்க்கத்தில் நுழைத்திருப்பவற்றில் அதிகமானது எது என நபிகளாரிடம் கேட்கப்பட்டது அதற்கு நபியவர்கள் இறையச்சமும் நற்பண்பும் என்று கூறினார்கள். மக்களை நரகில் நுழைத்திருப்பவற்றில் அதிகமானது எது என்று கேட்கப்பட்டது. அதற்கு வாய் நாவு மற்றும் மறை உறுப்பு என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆபூஹூரைரா (ரலி)
நூல் ஆசிரியர் : அப்துல் கரீம் எம்.ஐ. எஸ்.ஸி