079. ஸஃபா மர்வாவுக்கிடையில் எப்படி ஓட வேண்டும்?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
ஸஃபா மர்வாவுக்கிடையில் உள்ள முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரை ஆண்கள் மட்டும் சிறிது வேகமாக ஓடும்போது தோள்களை லேசாக குலுக்கவேண்டும் என்பது சரியா? சரியென்றால் எவ்வாறு குலுக்கவேண்டும்?
பதில்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள். (முஸ்லிம்: 2137)
தோள்களைக் குலுக்க வேண்டும் என்றால் சற்று விரைந்து நடக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள். மற்றபடி பெண்களுக்கென்று இதில் தனிச் சட்டம் இல்லை.