ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?
ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?
இந்தக் கம்பெனியில் நாம் சேர்ந்தால் நம்முடைய பங்கு ஹலாலான தொழிலில் இடப்பட்டுள்ளதா? அல்லத ஹராமான தொழிலில் இடப்பட்டுள்ளதா? என்பது தெரியாது. ஆகுமான தொழில் என்று உறுதியாகத் தெரியாத வரை அதில் நாம் முதலீடு செய்வது கூடாது.
ஷேர் மார்க்கெட் என்பது ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 1 கோடி மதிப்புள்ள தொழிலில் 30 லட்சம் ரூபாய் அளவிற்கு பிறர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிப்பார். ஒரு பங்கு என்பது 10 ரூபாயக்கு மேல் தாண்டக் கூடாது என்பது தான் சட்ட விதிமுறை. எனவே இந்த 10 ரூபாய் உள்ள ஒரு பங்கை 100 பங்காக சேர்த்து முதல் தடவையாக அதை 1000 ரூபாய் மதிப்பாக விற்பனை செய்வார். இவர் முதலில் நிர்ணயம் செய்யும் இந்த 1000 ரூபாய்க்கு முகமதிப்பு என்று பெயர்.
இதன் பின் முக மதிப்பாக உள்ள பங்கின் மதிப்பை நாட்கள் செல்ல செல்ல அதிகரிக்கிறார். உதாரணமாக 1000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்கின் மதிப்பு 2000, 3000, 4000 என்று ஏறி சில நேரங்களில் 1000 மதிப்புள்ள பங்கு 5 இலட்சம் வரை கூட சென்று விடும். 30 இலட்சம் மதிப்புள்ள பங்கு 10 மடங்காகி 3 கோடி என்றாகி விடுகிறது.
இதில் மார்க்கம் தடை செய்துள்ள பல அம்சங்கள் அடங்கியுள்ளன.
30 இலட்சம் மதிப்புள்ளது 3 கோடியாக ஆனதால் அவரிடமுள்ள 70 இலட்சம் மதிப்புள்ள பங்கின் மதிப்பு 7 கோடி என்று இல்லாததை இருப்பதைப் போன்று காட்டப்படுகிறது.
இந்தக் கம்பெனியில் நாம் சேர்ந்தால் நம்முடைய பங்கு ஹலாலான தொழிலில் இடப்பட்டுள்ளதா? அல்லத ஹராமான தொழிலில் இடப்பட்டுள்ளதா? என்பது தெரியாது. ஆகுமான தொழில் என்று உறுதியாகத் தெரியாத வரை அதில் நாம் முதலீடு செய்வது கூடாது.
நாம் 10000 முக மதிப்பில் உள்ள ஒரு பங்கை சில நாட்கள் கழித்து 5 இலட்சத்திற்கு வாங்குகிறோம் என்று வைத்து கொள்வோம். இலாப சதவீதத்தை நாம் வாங்கிய 5 இலட்சத்திலிருந்து கணக்கிடாமல் ஆரம்பத்தில் உள்ள 10000 என்ற முகமதிப்பிலிருந்து கணக்கிட்டு நமக்கு இலாபத்தைக் கொடுப்பார். இது நம்மை ஏமாற்றுகின்ற மோசடியாகும்.
ஒரு வியாபாரத்தில் கூட்டு சேர்பவர்கள் அந்த வியாபாரத்தின் மொத்த கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கு உரிமை பெற்றவர்கள். ஆனால் இந்த முறையில் கூட்டு சேர்ந்தவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படாது. எந்தத் தொழிலில் முதலீடு செய்யப்பட்டது? எவ்வளவு செலவானது,? எவ்வளவு இலாபம் வந்தது? என்ற எந்த விபரத்தையும் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது.