ஷஃபான் 15-ல் நரகவாசிகள் விடுதலையா?
ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதத்தில் 15ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான் என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : பைஹகீ இமாம் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஃபுல் ஈமான், ஹதீஸ் எண் : 3837
நமது விளக்கம்
ஷஅபான் 15ம் நாள் அல்லாஹ் நரகவாசிகளை விடுதலை செய்கிறான் என்று அவர்கள் எடுத்துக்காட்டிய செய்தியின் அரபி மூலம் இதோ :
3677 – أخبرنا أبو عبد الله الحافظ ، ومحمد بن موسى ، قالا : حدثنا أبو العباس محمد بن يعقوب ، حدثنا محمد بن عيسى بن حيان المدائني ، حدثنا سلام بن سليمان ، أخبرنا سلام الطويل ، عن وهيب المكي ، عن أبي رهم ، أن أبا سعيد الخدري … قَالَتْ عَائِشَةُ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ عَنْهُ ثَوْبَيْهِ ثُمَّ لَمْ يَسْتَتِمَّ أَنْ قَامَ فَلَبِسَهُمَا فَأَخَذَتْنِي غَيْرَةٌ شَدِيدَةٌ ظَنَنْتُ أَنَّهُ يَأْتِي بَعْضَ صُوَيْحِباتِي فَخَرَجْتُ أَتْبَعَهُ فَأَدْرَكْتُهُ بِالْبَقِيعِ بَقِيعِ الْغَرْقَدِ يَسْتَغْفِرُ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالشُّهَدَاءِ، فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي أَنْتَ فِي حَاجَةِ رَبِّكَ، وَأَنَا فِي حَاجَةِ الدُّنْيَا فَانْصَرَفْتُ، فَدَخَلْتُ حُجْرَتِي وَلِي نَفَسٌ عَالٍ، وَلَحِقَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” مَا هَذَا النَّفَسُ يَا عَائِشَةُ ؟ “، فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي أَتَيْتَنِي فَوَضَعْتَ عَنْكَ ثَوْبَيْكَ ثُمَّ لَمْ تَسْتَتِمَّ أَنْ قُمْتَ فَلَبِسْتَهُمَا فَأَخَذَتْنِي غَيْرَةٌ شَدِيدَةٌ، ظَنَنْتُ أَنَّكَ تَأْتِي بَعْضَ صُوَيْحِباتِي حَتَّى رَأَيْتُكَ بِالْبَقِيعِ تَصْنَعُ مَا تَصْنَعُ، قَالَ: ” يَا عَائِشَةُ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللهُ عَلَيْكِ وَرَسُولُهُ، بَلْ أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ: هَذِهِ اللَّيْلَةُ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ وَلِلَّهِ فِيهَا عُتَقَاءُ مِنَ النَّارِ بِعَدَدِ شُعُورِ غَنَمِ كَلْبٍ، لَا يَنْظُرُ اللهُ فِيهَا إِلَى مُشْرِكٍ، وَلَا إِلَى مُشَاحِنٍ ، وَلَا إِلَى قَاطِعِ رَحِمٍ، وَلَا إِلَى مُسْبِلٍ ، وَلَا إِلَى عَاقٍّ لِوَالِدَيْهِ، وَلَا إِلَى مُدْمِنِ خَمْرٍ “… هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ
இமாம் பைஹகீ அவர்களின் ஷ‚அபுல் ஈமான் என்ற நூலி-ருந்து எடுத்துக்காட்டியவர்கள் அந்த செய்தியின் இறுதியில் இமாம் பைஹகீ அவர்களின் அந்த செய்தியின் தரத்தைப் பற்றி கூறியதை வசதியாக இருட்டடிப்பு செய்துவிட்டார்கள்.
அதன் இறுதியில் هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ இது பலவீனமான அறிவிப்பாளர் தொடர் கொண்டதாகும் என்று குறிப்பிட்டு இந்த செய்தி ஆதாரமற்றது என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள்.
இந்த விஷயத்தை கூறினால் அவர்களின் ஆதாரத்தின் தகுதி மக்களுக்கு தெரிந்து விடும் என்பதால் அதை தெரிந்து கொண்டே மறைத்திருக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் ”முஹம்மத் பின் ஈஸா பின் ஹய்யான்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ்கலை வல்லுநர்கள் மிகக் கடுமையாக குறைகூறியுள்ளனர்.
171 – محمد بن عيسى بن حيان أبو عبد الله المدائني متروك الحديث (سؤالات الحاكم – (ج 1 / ص 135)
இவர் ஹதீஸ்களில் கைவிடப்பட்டவராவார் என இமாம் ஹாகிம் குறைகூறியுள்ளார்கள்.
(நூல் : ஸ‚ஆலாத்துல் ஹாகிம் பாகம் : 1 பக்கம் : 135)
وسألته عن محمد بن عيسى بن حيان الرازي ، فقال : لا شيء . ( سؤالات السلمي للدارقطني – (ج / ص )
இவர் எந்த ஒன்றுக்கும் தகுதியில்லாதவர் என இமாம் தாரகுத்னீ விமர்சித்துள்ளார்கள்.
(நூல் : சுஆலாத்துஸ் சுலமீ)
மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ”ஸல்லாம் பின் சுலைமான்” என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவராவார்.
2704- سلام بن سليمان بن سوار المدائني ابن أخي شبابة نزيل دمشق وقد ينسب إلى جده ضعيف من صغار التاسعة مات سنة عشر ومائتين أو بعدها ق – تقريب التهذيب : ابن حجر 1 /261
ஸல்லாம் பின் சுலைமான் என்பவர் பலவீனமானவராவார் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் :1,பக்கம் : 261