12) வெள்ளை ஆடையில் கஃபனிடுதல்
நூல்கள்:
ஜனாஸாவின் சட்டங்கள்
கஃபன் ஆடை எந்த நிறத்திலும் இருக்கலாம்; ஆயினும் வெள்ளை ஆடையே சிறந்ததாகும்.
‘நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்:(திர்மிதீ: 915), அபூ தாவூத் 3539,(இப்னு மாஜா: 1461),(அஹ்மத்: 2109, 2349, 2878, 3171, 3251)
வெள்ளை ஆடையில் கஃபனிடுவது கட்டாயம் இல்லை என்பதையும் அதுவே சிறந்தது என்பதையும் மேற்கண்ட நபிமொழியிலிருந்து அறியலாம்.