வெற்றியாளர்கள் யார் – 2
வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம்.
நல்லறங்கள் செய்பவர்கள்
இஸ்லாம் மனிதர்களுக்கு நல்லறங்களை செய்யுமாறு கட்டளையிடுகின்றது. ஆனால் இதை பெரும்பாலும் யாரும் கடைபிடிப்பதில்லை. நல்லறங்கள் இல்லாமல் மறுமை வெற்றி இல்லை என்பதை திருக்குர்ஆன் உறுதியாக அறிவுறுத்துகிறது.
فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ
திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர்
ஆவர். அல்குர்ஆன் ; 28;67
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
அல்குர்ஆன் ; 22;77
எதுவெல்லாம் நல்லறங்கள் ?
ஒரு முஸ்லிம் மார்க்கக் கட்டளைகளை மீறாமல் அவன் செய்யும் அனைத்து காரியங்களையும் இஸ்லாம் நல்லறங்களாகவே பார்க்கிறது. தனக்குரிய கடமைகளை அவன் செய்வதிலிருந்து குடும்பத்தினரை அவன் கவனிப்பதும், மற்றவர்களிடத்தில் அவன் உறவு பாராட்டுவதும், சிரிப்பதும், உறங்குவதும், சாப்பிடுவதும் அவனுக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு அவன் பொறுமை காப்பதற்கும் ஆபத்தான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு அவன் உதவுவதும் நல்லறங்கள் ஆகும்.
மனைவியிடத்தில் நல்ல முறையில் நடப்பதும் நல்லறமே!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட. நூல் : புகாரி ; 56பொருளாதாரத்தைப் பெருக்குவதில் மட்டுமே முழு நேரத்தையும் கழிக்கும் ஆண்கள் தன் மனைவிக்காகவும், குடும்பத்திற்காகவும் நேரத்தை ஒதுக்க வேண்டும். எத்தனை ஆண்கள் தன் மனைவியுடன் சேர்ந்து ஒன்றாக சாப்பிடுகிறார்கள்?. தன் மனைவி சாப்பிட்டாளா? சாப்பிடவில்லையா? என்று கூட கணவன்மார்களுக்கு தெரிவதில்லை. இவர்கள் இந்த நபிவழியை செயல்படுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
பேசுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள்
மனைவியிடத்தில் சிறிது நேரத்தையாவது ஒதுக்கி பேசுவதுகூட நல்லறமே.
நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியதை நாம் ஒதுக்கிறோம்.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்த பின்) உட்கார்ந்து (இரவுத் தொழுகை) தொழுதிருக்கிறார்கள்.அப்போது உட்கார்ந்தபடியே ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை நிலையிலேயே ஓதிவிட்டு ருகூஉச் செய்வார்கள். பின்னர் சஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் பார்ப்பார்கள். அப்போது நான் விழித்துக்கொண்டிருந்தால் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். நான் உறங்கிக்கொண்டிருந்தால் அவர்களும் படுத்துக் கொள்வார்கள்.
நூல் : புகாரி ; 1119
வேலையை முடித்து வீட்டிற்கு திரும்பினோமா, சாப்பிட்டோமா, டிவியை பார்த்துவிட்டு தூங்கினோமா என்று வாழ்க்கை நடத்தும் ஆண்கள் ஏராளம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேசிக்கொண்டிருந்தது ஆண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.
சிறு உதவிகள் செய்யுங்கள்
அஸ்வத் பின் யஸீத் அவர்கள் கூறியதாவது: “தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?” என்றுநான் (அன்னை) ஆயிஷா (ர) அவர்கடம் கேட்டேன். அவர்கள், “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்து விட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்” என்று பதிலத்தார்கள்.
நாட்டின் ஜனாதிபதியும் ஆன்மீகத் தலைவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தன் வேலைகளை தானே செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மனைவியிடத்தில் நல்ல முறையில் நடப்பதற்கு நன்மை என்று கூறி அதை நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளார்கள்.
நோயுறும் போது ஆறுதலாக
நோயுறும் போது ஆறுதலாக, உடல் நிலை சரியில்லாத மனைவியிடத்தில் நபிகளார் அன்புடனும் பாசத்துடனும் நடந்து கொள்வார்கள்.
(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்கன் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் நோயுறும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது) அவர்கடம் காண முடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்பார்கள்; பிறகு போய் விடுவார்கள். அவ்வளவு தான். இதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைக் குறித்து வெயே பேசப்பட்டு வந்த) அந்த தீய சொல்ல் ஒரு சிறிதும், நான் நோயிருந்து குணமடைந்து வெயே செல்லும் வரை எனக்குத் தெரியாது.
நூல் : புகாரி; 4141
அனஸ் பின் மாக் (ர) அவர்கள் கூறியதாவது: நானும் அபூ தல்ஹா (ர) அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் (போரிருந்து) மதீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர்களுடன்ஸஃபிய்யா (ர) அவர்களும் இருந்தார்கள். அவர்களை நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டி ருந்தார்கள். அவர்கள் சிறிதளவு தூரத்தைக் கடந்து வந்து கொண்டிருந்த போது வழியில் வாகனம் சறுக்கி விழுந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்கன் துணைவியாரும் கீழே விழுந்தார்கள்.
அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அனஸ் (ரலி) அவர்கள் இப்படிச் சொன்னார்கள் என்று எண்ணுகிறேன்: அபூதல்ஹா அவர்கள் தமது ஒட்டகத்திருந்து குதித்து இறங்கி அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்குக் காயம் எதுவும் ஏற்பட்டதா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. ஆயினும், நீ அந்தப் பெண்ணை கவனி” என்று கூறினார்கள். உடனே, அபூதல்ஹா அவர்கள் தம் துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்கள் மீது அத்துணியைப் போட்டார்கள். உடனே, அப் பெண்மணி (ஸஃபிய்யா (ர) அவர்கள்) எழுந்து கொண்டார்கள். பிறகு அபூதல்ஹா அவர்கள், அவர்கள் (நபியவர்கள் மற்றும் அன்னை ஸஃபிய்யா) இருவருக்காகவும் அவர்களுடைய வாகனத்தைச் சரி செய்து தந்தவுடன் இருவரும் ஏறிக் கொண்டனர். பிறகு, அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். மதீனாவின் அருகே வந்த போது நபி (ஸல்) அவர்கள், “பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனை வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் வரை இவ்வாறு கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
மார்க்கத்திற்கு உட்பட்டு நன்மையை எதிர்பார்த்து. நபிவழியை பின்பற்றி பெண்களிடம் நல்ல முறையில் நடந்து நன்மைகளை அடைவோம்.
பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ (பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
(புகாரி: 5186)
இன்னும் ஏராளமான பண்புகளை வெற்றியாளர்களின் பண்புகளாக இஸ்லாத்தை சொல்லித் தருகிறது. வெற்றியாளர்களின் மற்ற பண்புகளை அடுத்தடுத்த உரைகளில் காண்போம், இன்ஷா அல்லாஹ்!