விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்றனர் என்ற வசனம்
முக்கிய குறிப்புகள்:
குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்ற சிலரும் மக்களிடையே உள்ளனர் எனும் (22:11 ஆவது) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்வர்.)
அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர் களின் குதிரைகள் குட்டி ஈன்றால் அப்போது, இது (-இஸ்லாம்-) நல்ல மார்க்கம் என்று கூறுவார்கள். அவர்களுடைய மனைவியர் ஆண் குழந்தைகள் பெறவில்லையென்றால், அவர்களின் குதிரைகள் குட்டியிடவில்லை யென்றால், இது கெட்ட மார்க்கம் என்று சொல்வார்கள். (இவர்கள் தொடர்பாக இந்த இறைவசனம் அருளப்பெற்றது) என்று சொன்னார்கள்.