விற்பதற்காக பொய் சத்தியம் செய்த போது
முக்கிய குறிப்புகள்:
குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்
அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கடை வீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தான் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்த போது) கொடுக்காத(விலை) ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்தார்.
(வாங்க வந்த) முஸ்லிம்களில் ஒருவரைக் கவர்(ந்து அவரிடம் தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது,
அல்லாஹ்வின் உடன்படிக் கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை எனும் (3:77 ஆவது) இறைவசனம் இறங்கியது.