விபச்சாரம் செய்த குரங்கு

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

விபச்சாரம் செய்த குரங்கு

حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ
«رَأَيْتُ فِي الجَاهِلِيَّةِ قِرْدَةً اجْتَمَعَ عَلَيْهَا قِرَدَةٌ، قَدْ زَنَتْ، فَرَجَمُوهَا، فَرَجَمْتُهَا مَعَهُمْ»

அம்ர் இப்னு மைமூன் (ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.

(புகாரி: 3849)

  • இதில் வரும் அறிவிப்பாளர் அம்ர் பின் மைமூன் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவர். ஆனால் நபி (ஸல்) அவர்களை பார்க்கவில்லை என்பதால் இவர் நபித்தோழர் அல்ல. நபித்தோழர்களுக்கு அடுத்து உள்ள தாபீஈன்களில் உள்ளவர்.
  • (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் 3/307)

எனவே இது முன்கதிஃயான அறிவிப்பாளர் தொடர் என்பதால் பலவீனமானதாகும்.