வித்ர் பிறகு ஸுப்ஹானல் மலிக்குல் உண்டா?
கேள்வி-பதில்:
தொழுகை
வித்ர் பிறகு ஸுப்ஹானல் மலிக்குல் உண்டா?
ஆம். உண்டு.
நபியவர்கள் வித்ரு (ஒற்றைப் படை)த் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹ்ஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற 87 வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல்யா அய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், (மூன்றாவது ரக்அத்தில்) குல்ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள். ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று மூன்று முறை சொல்லுவார்கள்.
அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி),
நூல்: (நஸாயீ: 1699) (1710) , 1711, 1712, 1713, 1714, 1715, 1716, 1717, 1718, 1719, 1720, 1721, 1730, 1731, 1732, 1733, 1734 ஆகிய பதினேழு வெவ்வேறான அறிவிப்புகளில் மேற்கண்ட செய்தி திரும்பத் திரும்ப வரிசையாக நஸாயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.