வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்த மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா?
கேள்வி-பதில்:
தொழுகை
வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்த மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா?
? ஹனபி மத்ஹபினர் வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்தி பின்பு கட்டிக் கொண்டு குனூத் ஓதுகின்றார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளதா?
எஸ். அப்துல் ஹக்கீம், சக்கரப்பள்ளி
வித்ரு தொழுகையில் ருகூவுக்கு முன்பாகவோ, அல்லது ருகூவுக்குப் பின்போ குனூத் ஓத வேண்டும் என்று வலியுறுத்தி ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு குனூத் ஓதும் போது தக்பீர் கூறி கைகளை உயர்த்திக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
குறிப்பு: 2004 ஏப்ரல் மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி