வாரத்தில் இரண்டு நாட்கள் நோன்பு பிடித்தால் அதிக நாட்கள் வாழலாம்

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் நோன்பு பிடித்தால் அதிக நாட்கள் வாழலாம்   

 “வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் உணவு உண்ணுவதைத் தவிர்ப்பதன் மூலம் அதிக நாட்கள் உயிரோடு வாழலாம்” என்று ஒரு புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.. National Institute of Ageing தேசிய வயோதிகம் நிறுவனம் என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் “வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விரதம் இருப்பதன் மூலம் அதிக நாள்கள் வாழலாம். மூளையில் ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் நோய் (Alzheimer ‘ s disease), பார்கின்சன் வியாதி (parkinson disease),  மற்றும் மூளை முதுகுத் தண்டுவடம் தேய்மான நோய்  Degenerative disease களில் இருந்து இந்த விரதம் மூலம் பாதுகாப்பு பெறலாம்.. கலோரிகள குறைத்து கொள்வதின் மூலம், மூளையில் உள்ள இரசாயனத் தூதுகள் எனப்படும் Chemical messengers தூண்டப்படுகிறது” என்று குறிப்பிடுகிறார்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் சுன்னத்தான நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்.) ‘The Daily Telegraph’ என்ற பத்திரிக்கை இவ்வாறு கூறுகிறது: உணவை அதிகம் குறைப்பதன் மூலமும் கலோரிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலமும் எலி போன்ற ஆய்வக பிராணிகளின் வாழ்நாட்கள் அதிகமாவது பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ ஆய்வாளர்களுக்குத் தெரிந்த உண்மையாக இருந்தாலும், இந்த அந்த விளைவு மனிதனிலும் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை வெறும் ஊகம் மூலம் மட்டுமே நம்பி இருந்தனர். இந்தக் கோட்பாடு சந்தேகம் இன்றி ஆய்வின் மூலம் மனித மாடல்களில் நிரூபிக்கப்படுவது சற்று கடினமாக இருந்து வந்தது . ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள், இந்த நேர்மறை விளைவை (positive effect) கண்டு பிடித்து விட்டனர்.

(முஸ்லிம்களின் நோன்பு என்பது தொடர்ந்து பட்டினி கிடப்பது அல்ல. இடைவெளி விட்டு சாப்பிடுவது.) தற்போது நரம்பு அறிவியல் பேராசிரியர் மார்க்மாட்சன் (தலைவர், நரம்பு அறிவியல் ஆய்வக நிறுவனம் Prof Mark Mattson, head of the institute’s laboratory of neurosciences)  இவ்வாறு கூறுகிறார்: கலோரிகளைக் குறைப்பதன் மூலம் உங்கள் மூளைக்கு உங்களால் உதவ முடியும். மூளைகளில் பல நோய்கள் உருவாவதைத் தடுக்க முடியும்.. அதற்காக தொடர்ந்து பட்டினி கிடப்பதால், இந்த நன்மைகள் உங்கள் மூளைக்குக் கிடைக்காது. Intermittent Bouts of fasting, , என்ற இடைவெளி விட்ட விரதம், அதாவது, கொஞ்சம் இடைவெளிகளில் எந்த உணவையும் அறவே தடுப்பது, அதற்கு அப்புறம் தனக்கு வேண்டியதை தேவை நிறைவேறும் வரை உண்பது என்ற கோட்பாடு மூலம் இந்த நன்மை கிடைக்கும்” என்று கூறுகிறார்.

நமது கமெண்ட்: Prof Mark Mattson, head of the institute’s laboratory of neurosciences  கூறும் விரதம் என்பது முஸ்லிம்கள் இருக்கும் நோன்பு என்னும் விரதத்தை மட்டுமே குறிக்கிறது. முஸ்லிம்கள் பொதுவாக கட்டுப்பாடற்ற, அசைவ உணவை அதிகம் உட்கொண்டாலும்,, மற்றவர்களை ஒப்பிடும்போது அவர்களின் வாழ்நாட்கள் சராசரியை விட குறைவதாக இல்லை..இதற்குக் காரணம் இந்த நோன்பின் மாண்பாக இருக்கலாம்.. இஸ்லாம் செய்யச் சொன்ன ஒவ்வொரு செயலுக்கும் பின்னர் மிகப்பெரிய அறிவியல் நன்மை கலந்து உள்ளது என்பது சமீப காலமாக தெள்ளத் தெளிவாகி வருகிறது….

 

Source : UNARVU ( 20/04/18 )