வறுமை விரைந்தோடி வரும் என்ற செய்தி
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، عَنْ أَبِيهِ
أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجَتَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْبِرْ أَبَا سَعِيدٍ فَإِنَّ الْفَقْرَ إِلَى مَنْ يُحِبُّنِي مِنْكُمْ أَسْرَعُ مِنَ السَّيْلِ مِنْ أَعْلَى الْوَادِي، وَمِنْ أَعْلَى الْجَبَلِ إِلَى أَسْفَلِهِ»
அபூஸயீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தம்முடைய ஏழ்மையைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூஸயீத் அவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களில் யார் என்னை நேசிக்கிறாரோ அவரை நோக்கி, பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற வெள்ளத்தை விட விரைவாக அல்லது மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி விழுகின்ற வெள்ளத்தைப் போல வறுமை விரைந்தோடி வரும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் அபீ ஸயீத்(ரலி)
நூல்: (அஹ்மத்: 11379, 10952)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32148-அம்ர் பின் ஹாரிஸ் அவர்கள், ஸயீத் பின் அபூஸயீத் (ரலி) அவர்களிடம் எதையும் செவியேற்கவில்லை என்று பைஹகீ இமாம் கூறியுள்ளார்.
- மேலும் இதில் அபூஸயீத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் அபூஸயீத் என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். மேலும் இவரிடமிருந்து அம்ர் பின் ஹாரிஸ் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்ற கருத்தே உண்மையாகும். சிலர் இவர் இடம்பெறும் சில செய்திகளை பலமான அறிவிப்பாளரான ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ அறிவிக்கிறார் என்று தவறாக கருதியுள்ளனர். இவர் அறியப்படாதவர் என்றே முடிவு செய்ய வேண்டியுள்ளது.
மேலும் இந்த செய்தி பற்றி முழுவதுமாக அறிய : https://quranandhadis.com/ta/musnad-ahmad-11379/