071. ருக்னுல் யமானியை தொட்டு முத்தமிட வேண்டுமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

“ருக்னுல் யமானியை முத்தமிடக்கூடாது; கையால் தொட மட்டுமே செய்ய வேண்டும்’ என்பது சரியா? “ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிட வேண்டும் என்பது சரியா?

பதில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் “யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 166, 1609)

இந்த ஹதீஸில் முத்தமிட்டதாகக் கூறப்படவில்லை. தொடுவது மட்டும் தான் கூறப்படுகின்றது.

ருக்னுல் யமானியை முத்தமிட்டதாக நாம் தேடிய வரையில் எந்த ஹதீசும் இல்லை. ருக்னுல் யமானியை கையால் தொடுவது தான் நபிவழியாகும்.