யூத நாடாக அறிவிக்கப்பட்ட இஸ்ரேல்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

யூத நாடாக அறிவிக்கப்பட்ட இஸ்ரேல்

1948ஆம் ஆண்டுக்கு முன்பு இஸ்ரேல் என்ற நாடே இருக்கவில்லை. இந்நிலையில் அரபுப் பகுதிகளை ஆக்கிரமித்து கடந்த 1948ஆம் ஆண்டு மே 14 அன்று இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது.

அப்போது வெளியிடப் பட்ட பிரகடனத்தில் மதம், இனம், பாலினம் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமூக அரசியல் உரிமைகள் வழங்கப்படும். மதம், மொழி சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேலை யூத நாடாக பிரகடனம் செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்திற்கு ஆதரவாக 62 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 55 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். மேலும் இந்த சட்டத்தில் ஒருங்கிணைந்த ஜெருசலேம் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தில் ஹிந்தி மொழிக்கு மட்டுமே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது.

அரபுமொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் யூதர்கள் அதிகமாக வாழ்ந்த போதும் அரபு முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் வசித்து வருகிறனர். சமயம் சாராத அரசு என அறிவிக்கப்பட்ட போதே இந்த முஸ்லிம்கள் இஸ்ரேலின் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

இந்நிலையில் இப்போது இஸ்ரேல் யூத நாடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கொடுமைகள் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் என்பது முஸ்லிம்களுக்குச் சொந்தமான பகுதி. இந்தப் பகுதியில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு ஃபாலஸ்தீன மக்கள் மட்டுமில்லாமல் உலகமே எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து இயற்றப்பட்ட சட்டம் இஸ்ரேல் பிரச்சினையில் மேலும் சிக்கல் ஏற்படுத்தும்.

Source : unarvu ( 05/10/18 )