மூடநம்பிக்கையில் மூழ்கும் இந்தியா

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

மூடநம்பிக்கையில் மூழ்கும் இந்தியா

இந்திய நாடு பண்முகத்தண்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை பேணும் நாடு. இப்படி பட்ட இந்திய நாட்டில் தற்போது நிலவி வரும் மதவாத சக்திகளின் அராஜகம், அடிதடி மற்றும் கொலை செயல்கள் ஒரு புறம் வரம்பு மீறி சென்றுகொண்டிருந்தாலும் அதை தடுக்க வேண்டிய மத்திய அரசு அதை கண்டும்காணமல் இந்த செயலுக்கு மௌனமாக இருந்து ஆதரவு அளித்து வருகிறது. அதிலும் கல்வி மற்றும் அரசுத்துறையில் மதத்தை தினிப்பது தற்போது அதிகரித்து வருகிறது.

பள்ளி பாடப்புத்தகத்தில் பள்ளிவாசலில் வரும் பாங்கு ஓசை ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் என்ற படக்காட்சியை வைத்து தனது மத வெறுப்பை காட்டியது, தமிழகத்தின் சிறந்த அரசு பல்கலைகழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் தலைமை பொறுப்பான வேந்தர் பொறுப்பில் வெளிமாநிலத்தில் இருந்து மதவாத சிந்தனை உடையவரை பணியமர்த்தி தற்போது அவர் பகவத்கீதையை பொறியியல் பாடத்தில் ஒரு பாடமாக அறிவித்தது மட்டுமல்லாமல் சென்னை ஐஐடி – இந்திய தொழில்நுட்ப கழகத்தில் தேசிய கீதத்திற்க்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடி தமிழ்ப்பற்று மற்றும் நாட்டுப்பற்றை மறுக்கும் நிலை.

இதேபோல் இந்திய இரானுவத்திற்காக 1638 கோடி செலவில் பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானம் இந்திய இரானுவத்தில் இனைப்பதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தேங்காய், பூ மற்றும் விமானத்தின் டயரில் எலுமிச்சை வைத்து பூஜை செய்து மத்திய அரசாங்கம் இந்திய அரசின் மத சார்பின்மை கேள்விக்குறியாக்கியுள்ளது. மதரீதியாக தொடர்ச்சியாக இந்த மத்திய அரசாங்கம் மாதவாதம் மற்றும் மதசடங்குகளில் முழங்கி இருப்பது இந்திய நாட்டிற்கு உலக அளவில் பின்னடைவை ஏற்படுத்தும். இவ்வாறு தொடர்ந்து நடக்குமேயானால் இந்தியா சிறுபாண்மை மக்களுக்கு அரசு மீது துளி அளவும் நம்பிக்கை அற்று போகும். 

Source: unarvu (அக்டோபர்:18 – 24, 2019.)