1) முன்னுரை

நூல்கள்: சுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வு

ஸுப்ஹான மவ்லிது

தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து மவ்லிதுகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை நாம் அறியலாம்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பெயரால் ஸுப்ஹான மவ்லிது, பர்ஸஞ்சி மவ்லிது,புர்தா போன்ற பாடல்கள், நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பேரர்கள் ஹஸன்,ஹுஸைன் ஆகியோர் பெயரால் மவ்லிதுகள், அப்துல் காதிர் ஜிலானி என்பவரின் பெயரால் முஹ்யித்தீன் மவ்லிது, யாகுத்பா, நாகூர் ஷாகுல் ஹமீது என்பவரின் பெயராலும், அந்தந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் பெயராலும் வகை வகையான மவ்லிதுகள் உலா வருகின்றன.

எல்லா மவ்லிதுகளுமே பொய்யும் புரட்டும் நிறைந்ததாகவும், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கக் கூடியதாகவும் உள்ளன. அவற்றுள் முதலிடத்தைப் பெற்றுள்ள ஸுப்ஹான மவ்லிது எவ்வாறு அபத்தக் களஞ்சியமாக அமைந்துள்ளது என்பதையும், திருக்குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் எந்த அளவு முரணாக அமைந்துள்ளது என்பதையும் கீழ்க்காணும் தலைப்புகளில் இந்நூல் விரிவாக அலசுகிறது

  • ஸுப்ஹான மவ்லிது
  • மவ்லிதின் தோற்றம்
  • மவ்லிதின் பிறப்பிடம்
  • எழுதியவர் யார்?
  • நபியைப் புகழுதல்
  • மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்
  • அ குர்ஆனை இழிவுபடுத்தும் போக்கு
  • ஆ தொழுகையை விட மவ்லிதை மேலானதாகக் கருதும் நிலை.
  • இ பள்ளிவாசலின் புனிதம் கெடுதல்
  • ஈ பிறமதக் கலாச்சார ஊடுருவல்
  • உ பிறருக்கு இடையூறு செய்தல்
  • ஊ ஒழுக்கக் கேடுகளை ஏற்படுத்துவது
  • எ பெருமையும், ஆடம்பரமும்
  • நோய் நிவாரணம் தருவது நபிகள் நாயகமா?
  • உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா?
  • வானவர்கள் மீது அவதூறு
  • பொய்யும் புரட்டும்
  • அபத்தங்கள்