1) முன்னுரை

நூல்கள்: தூங்கும் வேளையிலே!

தூங்கும் முன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே செல்கின்ற இன்றைய காலகட்டத்தில் மனிதன் இயந்திரமாக மாறி விட்டான்.

காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை மனித வாழ்க்கை இயந்திரமாகவே செல்கின்றது. எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் மனிதனிடம் அவசரம் தான் உள்ளது. நிதானம் என்பது இல்லை.

முஸ்லிம்களாக இருந்தால் அந்தக் காரியத்தை இஸ்லாம் எவ்வாறு செய்யச் சொல்கின்றது என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. சிலருக்குத் தெரிந்தாலும் அதைச் சரியான முறையில் செய்வதில்லை.

ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து மரணிக்கின்ற வரை அவன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை தன்னுடைய ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும், அந்தச் செயல்களைச் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் என்னென்ன என்பதையும் இஸ்லாம் சொல்லித் தருகின்றது.

இதில் ஒரு மனிதன் படுக்கைக்குக் செல்லும் முன் செய்ய வேண்டிய காரியங்கள் எவை எனப் பார்ப்போம்.

 

எஸ். சிராஜ் ஃபாத்திமா

ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம்