முனாஃபிக்கிற்கு நபி தொழ வைக்க முயன்ற போது
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்து விட்ட போது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடு வதற்காக நபி (ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தமது சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர் களிடம் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று உங்கள் இறைவன் உங்களுக்குத் தடைவித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்! என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பாவன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான் என்று கூறிவிட்டு, (நபியே!) நீங்கள் அவர்களுக்காப் பாவ மன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோரா மலிருங்கள். (இரண்டும் சமம்தான். ஏனெனில்,)
அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒரு போதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று கூறுகிறான். நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன் என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள், இவர் நயவஞ்சகராயிற்றே! என்று சொன்னார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோனான அல்லாஹ், அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்கவேண்டாம் எனும் (9:84ஆவது) வசனத்தை அருளினான்.
4671 உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்கர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இறந்து விட்ட போது அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதற்காக) எழுந்த போது அவர்களிடம் நான் குதித்தோடிச் சென்று, அல்லாஹ்வின் தூதரே! இப்னு உபைக்கு நீங்கள் முன்னின்று தொழுகை நடத்துகின்றீர்களா? அவரோ இன்னின்ன காலகட்டத்தில் இப்படி இப்படி யெல்லாம் சொன்னாரே! என்று அவர் சொன்னவற்றை (எல்லாம்) நபியவர்களுக்கு எண்ணிக் காட்டிக் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைபுரிந்து விட்டு, ஒதுங்கிக் கொள்ளுங்கள், உமரே! என்று சொன்னார்கள். நான் அவர்களை இன்னும் அதிகமாகத் தடுக்கவே, அவர்கள், இவருக்காகப் பாவமன்னிப்புக் கோரவும் கோராமல் இருக்கவும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் (அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதைத் தேர்ந் தெடுத்துக் கொண்டேன்.) நான் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோரினால் இவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கப்படும் என்று எனக்குத் தெரியவரு மாயின் எழுபது முறையைவிட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருவேன் என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுவித்து விட்டுத் திரும்பினார்கள். சற்று நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் பராஅத் (9ஆவது) அத்தியாத்திலிருந்து அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்) தொழுவிக்க வேண்டாம்; அவருடைய மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம். ஏனென்றால், திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்து விட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்துபோனார்கள்எனும் (9:84, 85 ஆகிய) இரு வசனங்கள் அருளப்பெற்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் பேசிய என் துணிச்சலைக் கண்டு பின்னர் நான் வியந்தேன். (எனினும்) அல்லாஹ்வும்,அவனுடைய தூதருமே மிகவும் அறிந்தவர்கள்.
பாடம் : 13