முதல் ஷஹீத் சுமைய்யா (ரலி)
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
முதல் ஷஹீத் சுமைய்யா (ரலி)
أخبرنا أبو الحسين بن بشران ببغداد قال أخبرنا أبو عمرو بن السماك قال حدثنا حنبل بن إسحاق قال حدثني أبو عبدالله يزيد بن أحمد بن حنبل قال حدثنا وكيع عن سفيان عن منصور عن مجاهد قال
أول شهيد كان في الإسلام استشهد أم عمار سمية طعنها أبو جهل بحربة في قبلها – دلائل النبوة ـ للبيهقى موافقا للمطبوع – (2/282)
இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர் தியாகி) அம்மாரின் தாயார் சுமைய்யா (ரலி) ஆவார். அவரின் மர்ம உறுப்பில் ஈட்டியை குத்தி கொன்றான் அபூஜஹ்ல்.
அறிவிப்பவர்: முஜாஹித் (ரஹ்)
நூல்கள்: தலாயிலுன் நுபுவ்வா-பைஹகீ-614 , பாகம்: 2, பக்கம் : 282, முஸன்னப் இப்னு அபீ ஷைபா, பாகம் :13, பக்கம் :48, தபகாத் இப்ன ஸஅத், பாகம் : 8 பக்கம் : 864.
இந்த சம்பவத்தை அறிவிப்பவர் முஜாஹித் ஆவார். இவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. நபிகளார் காலத்தில் நடந்த சம்பவத்தை இவரால் அறிந்து கொள்ள முடியாது. எனவே இந்த செய்தி அறிவிப்பாளர் தொடர் அறுந்த முர்ஸல் வகையைச் சார்ந்ததாகும்.