முட்டாள் கொடை வள்ளல், கஞ்சனான அறிவாளியை விட சிறந்தவன்
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
”கொடைவள்ளல் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவன், சுவர்க்கத்திற்கு நெருக்கமானவன், மக்களிடமும் நெருக்கமானவன். கஞ்சன் அல்லாஹ் வை விட்டும் தூரமானவன், சுவர்க்கத்தை விட்டும் தூரமானவன், மக்களை விட்டும் தூரமானவன்.
அறிவிலியான கொடை வள்ளல், கஞ்சனான அறிவாளியை விட அல்லாஹ்விடம் பிரியமானவன்”
என்ற இந்த ஹதீஸ் ”அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (284)ம் பக்கத்திலும், ”தர்தீபுல் மவ்ழுஆத்’ என்ற நூலில் (564)ம் பக்கத்திலும் ”அல்லஆலில் மஸ்னுஸஆ’ என்ற நூலில் (2/91) ம் பக்கத்திலும் பலவினமானது என்றுள்ளது.