16) முடிவுரை
நூல்கள்:
குற்றச்சாட்டுகளும் பதில்களும்
இஸ்லாத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் நமது கவனத்திற்கு வந்த குற்றச்சாட்டுக்கள் இவை தாம். இவை தவிர இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பாக ஏற்கனவே தனி நூலை வெளியிட்டிருந்தோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற குற்றச்சாட்டுக்கும் தனி நூலை பதிலாக வெளியிட்டுள்ளோம்.
எஞ்சிய குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் இந்த நூலில் விளக்கமளித்துள்ளோம்.
இவை தவிர மேலும் குற்றச்சாட்டுகள் இருப்பது தெரிய வந்தால் அதை நமது கவனத்தில் கொண்டு வருபவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்போம். அவற்றுக்கும் விளக்கம் தருவோம். உள்ளதை உள்ளபடி விளங்கி நடக்க நம் அனைவருக்கும் இறைவன் அருள்புரியட்டும்!