71) முக்கியப் பிரமுகருக்கு தலைப்பாகையுடன் கஃபனிடலாமா?
நூல்கள்:
ஜனாஸாவின் சட்டங்கள்
மார்க்க அறிஞர்கள் போன்ற பிரமுகர்கள் கஃபனிடப்படும் போது அவர்களுக்குத் தலைப்பாகை கட்டி அதனுடன் கஃபனிடும் வழக்கம் பல பகுதிகளில் காணப்படுகிறது. வாழும் போது தனியாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டது போல மரணித்த பிறகும் வேறுபாடு காட்டப்படுவது கொடுமையிலும் கொடுமையாகும்.
மாமனிதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை, சட்டையுடன் கஃபனிடப்படவில்லை என்ற மேற்கண்ட ஹதீஸிலிருந்து அவர்கள் செய்வது ஆதாரமற்றது என்பதை அறியலாம்.
கிரீடம், தலைப்பாகை போன்றவற்றை அணிந்து கபனிடுவது கெட்ட முன்மாதிரியாகும்.