முகலாயர்களின் ஆட்சியில் பொருளாதார உச்சத்தை தொட்ட இந்தியா

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

முகலாயர்களின் ஆட்சியில் பொருளாதார உச்சத்தை தொட்ட இந்தியா

முகலாயர்கள் படையெடுத்து வந்தவர்கள் எனும் கருத்துருவாக்கம் சமீக கால, மத ரீதியிலான அரசியலின் வருகைக்கு பின் உருவாக்கப்பட்ட ஒன்று தானே அன்றி, முகலாயர்களின் ஆட்சி காலத்திலோ, அதற்கு பின்னரோ இந்த கருத்தானது நிலை கொள்ளவில்லை. இதுவே, அவர்கள் தங்களை முழுமையாகவே இந்தியர்கள் எனும் அடையாளத்துடன் காட்டிக் கொண்டே இருந்துள்ளார்கள் என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது.

இந்தியர்களை திருமணம் செய்ததோடு, அவர்களின் வம்சங்கள் ராஜபுத்திர வழி தலை முறையையே கொண்டிருந்தது. பெற்றோர் அந்த வம்சத்தை சார்ந்தவர் களாகவே இருந்துள்ளனர். ராஜபுத்திர வம்சத்தை சார்ந்தவர்களே முகலாய அரசர்களின் அரசவையில் முக்கிய பதவிகளை வகித்து வந்தவர்களாக இருந்தனர். அதே போன்று, மதத்தை பரப்பும் நோக்கில் தான் முகலாயர்களின் ஆட்சி அமையப் பெற்றிருந்தது என்கிற கருத்தும் பொய்யானது தான் என்பதற்கும் எண்ணற்ற சான்றுகளை காணலாம்.

அதில் முக்கியமானது, மன்னர் பாபர் கலந்து கொண்ட பானிப்பட் போர். 1526 ஆம் ஆண்டு, டில்லி சமஸ்தானத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னன் இப்ராஹிம் கான் லோடியுடன் போரிட்டு, அப்பகுதியை மீட்டார் மன்னர் பாபர். இந்திய நிலப்பரப்பை அந்நியர்களின் ஆக்கிர மிப்புக்கு இடமளிக் காதவாறு அரசியல் செய்வது தான் முகலாயர்களின் குறிக்கோளாக இருந்ததே அல்லாமல், மதத்தை பரப்பும் நோக்கம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை.

இன்னும் சொல்வதானால், இஸ்லாமிய மார்க்கத்தை அவர்களே சரிவர பேணியவர்களும் அல்லர். இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கான தூண்டுதலாக அமைந்த சிப்பாய் போர் 1857 ஆம் ஆண்டு நடைபெற்றது. அது கூட, அப்போதைய முகலாய மன்னர்களின் வழிவந்த மன்னர் பஹதூர் ஷாஹ் சஃபர் என்பவரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றது தான் என்பது வரலாற்றுக் குறிப்பு.

பொருளாதாரத்தில் உச்சம் 16 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு முதலான காலகட்டம் என்பது இந்திய பொருளாதாரத்தின் பொற்காலம் எனலாம். உலக அளவில் வணிக ரீதியாக மிக வலிமையான சாம்ராஜ்ஜியமாக முகலாய சாம்ராஜ்ஜியம் திகழ்ந்ததாக ஃபிரெஞ்ச் ஆய்வாளர் ஃபிரான்கோயிஸ் என்பவர் தெரிவிக்கிறார். “தங்கமும் வெள்ளியும் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஹிந்துஸ் தானுக்கு வருகிறது” என்று தமது நூலில் அவர் குறிப்பிடும் அளவிற்கு, இந்திய கைத்தறித் துறை, பருத்தி ஆடை ஏற்றுமதி, பட்டு, பல வகை மசாலாக்கள், உப்பு, முந்திரி, பாதாம் போன்ற பல வகைப் பொருட்கள் இந்தியாவிலிருந்து பெருமளவில் ஏற்றுமதி ஆயின.

அதற்கான சாலை போக்குவரத்து, கடற் பயணங்கள் போன்றவையும் வரி விகிதங்கள் குறைக்கப் பட்டு நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்பில் கொண்டு வரப்பட்டன. வரலாற்றிலேயே அதிக பட்ச DGP (மொத்த உள்நாட்டு உற்பத்தி)இந்தியா கொண்டிருந்தது கிபி 1000 முதல் 1500 க்கு இடைப்பட்ட ஆண்டுகள் தான் என “contours of world economy” எனும் தமது நூலில் குறிப்பிடுகிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் ஆங்கஸ் மேடிசன்.

அப்போதைய ஜிடிபி 20.9% (இன்று 5%) 18ஆம் நூற்றாண்டில் பொருளாதாரத் துறையில் சீனாவை பின்னுக்கு தள்ளியிருந்தது இந்தியா எனும் தகவலையும் அவர் தெரிவிக்கிறார். இவ்வாறு, முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியா செல்வசெழிப்பில் மிதந்தது என்பதையே வரலாற்றுத் தகவல்கள் நமக்கு கூறுகின்றன.

Source: unarvu (29/11/2019)