மிகப்பெரிய பாவம் எது என்று வினவிய போது

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான் (பெரும் பாவம்) என்று பதிலளித்தார்கள்.

நான், பிறகு எது? என்று கேட்டேன். அவர்கள், உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது என்று சொன்னார்கள்.

நான் பிறகு எது? என்று கேட்க, அவர்கள் உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ”மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் இந்த (அல்குர்ஆன்: 25:68)ஆவது) இறை வசனம் இறங்கிற்று.

(புகாரி: 4761)