மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்! மனோகர் எனும் முனவ்வர்!

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்! மனோகர் எனும் முனவ்வர்!

பெங்களூரை சேர்ந்த மனோகர் எனும் இந்த முதியவர் திருமறை குர்ஆனை படித்து அதன் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர்! இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் மனைவி மக்களால் புறக்கணிக்க பட்டு, சொத்து,சுகம், சொந்த பந்தங்களை துறந்து தற்போது சென்னையை தனது வாழ்விடமாகவும் , தஃவாவை தனது முழுநேர பணியாகவும் ஆற்றி வருகிறார்!

தனக்கு நேர்வழி காட்டிய குர்ஆனை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கோடு, தனக்கு ஜகாத் ஆக வந்த தனது இறுதிக கால பாதுகாப்பு நிதியான ரூபாய் 2 லட்சத்தை செலவழித்து 2000 குர்ஆனை அச்சடித்து வழங்கி உள்ளார்!

அதில் தஃவா குழுவுக்கு மட்டும் இதுவரை 1000 குர்ஆனை வழங்கி உள்ளார்! எல்லா புகழும் இறைவனுக்கே! அது மட்டுமன்றி அப்துல் ஹமீது அவர்களின் எழுத்தில் உருவான “நாத்திகமா பகுத்தறிவுவா” எனும் சிற்றேட்டை 10000 க்கும் அதிகமாக அச்சிட்டு வழங்கி உள்ளார்!

இறப்பதற்கு முன்னதாக 10000 குர்ஆனை கொண்டு சேர்க்க திட்டமிட்டு உள்ளதாக கூறுகிறார்! அவருக்காக நாம் பிரார்த்திபோம்.

பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கிறோம் என்று வெற்று பெருமை பேசுபவர்கள் மத்தியில் சகோதரர் மனோகர் என்ற முனவ்வரின் சேவை பாராட்டத்தக்கது. இறைவன் இவருடைய சிறந்த சேவையை பொருந்திக் கொள்வானாக!