109) மரணச் செய்தியைக் கேட்டவுடன் பாவமன்னிப்புத் தேடல்
நூல்கள்:
ஜனாஸாவின் சட்டங்கள்
மரணச் செய்தி நம்மிடம் கூறப்பட்டால் ‘அவரை அல்லாஹ் மன்னிக்கட்டுமாக!’ என்று அவருக்காக உடனே துஆச் செய்ய வேண்டும்.
அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஷி இறந்த செய்தியை நபிகள் நாயகம் அறிவித்த போது ‘உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
ஸைத் (ரலி), ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோரின் மரணச் செய்தியை மக்களுக்கு நபிகள் நாயகம் அறிவித்த போது ‘அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்’ எனக் கூறியுள்ளனர்.