மன நோயை அதிகரிக்கும் வீடியோ கேம்ஸ்
மன நோயை அதிகரிக்கும் வீடியோ கேம்ஸ்
ஆதிகாலத்திலிருந்து கடந்து வந்து தற்போது நவீன விஞ்ஞானம் ஆன உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! இன்றைக்குள்ள பல நவீன சாதனங்களால் பல சாதனைகளை புரிந்தாலும், இந்த நவீன சாதனங்களால் பல வேதனைகளும் மனித சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது! எனவே இந்த நவீன உலகத்தில் நவீன சாதனங்களால் ஏற்படுகிற சில பாதிப்புகளை கீழே நாம் விழிப்புணர்வுக்காக குறிப்பிடுகிறோம்!
வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் ஒருவித மனநோய் தான் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. வீடியோ கேம் விளையாட்டை நிறுத்தவே கூடாது என்ற மனநிலை ஏற்படுவதே இதன் முதல் அறிகுறி என கூறியுள்ள அவர், உலகெங்கிலும் உள்ள வல்லுனர்களுடன் கலந்தாலோசித்த பிறகே உலக சுகாதார நிறுவனம், வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை மனநோய் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்! முன்கூட்டியே இதனை கண்டறிந்தால் சரிசெய்துவிடலாம்.
இளைஞர்களும் பதின்ம வயதினருமே அதிக அளவில் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிறார்கள்! சுமார் 250 கோடி மக்கள் ஏதேனும் ஒரு வகையில் செல்போனிலோ அல்லது வேறு வழிகளிலோ வீடியோ கேம் விளையாடுகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடியோ கேம் விபரீதங்கள்:
(1) நொய்டாவில் 15 வயது தனது மகன் பிரபாகர் ஆக்ரோஷமான வீடியோ கேம் ஒன்றை தொடர்ந்து விளையாடி வந்ததால், அதே போன்று தாயையும், தங்கையையும் கொன்று பணத்தை திருடி சென்ற சிறுவன்!
(2) சீனாவில் 24 மணி நேரமும் வீடியோ கேம் விளையாடியதால் கண் பார்வை பறிபோன சம்பவம் அரங்கேறியுள்ளது! October 11, 2017
(3) நியூயார்க்: அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாட அக்கா அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த 9 வயது தம்பி அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3.6.2018
(4) ‘புளூ வேல்’ – ஆஷிக்கைக் கொன்ற ஆன்லைன் விளையாட்டு? ஆகஸ்ட் 25- 2017
(5) புளூ வேல் விளையாட்டுக்கு பலியாவது எனது மகனோடு முடியட்டும்: பலியான மாணவரின் தந்தை உருக்கம் ஆகஸ்ட் 31 2017
(6) ‘புளூ வேல்’ விளையாடி கை விரல் அறுத்த மாணவி ஆகஸ்ட் 25- 2017
இப்படி நவீன வீடியோ கேம்ஸ்களால் தன்னளவில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியவர் களாகவும் பிறருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் சிறுவர்கள் இளைஞர்கள் மாணவர்கள் அதிகளவில் பெருகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்! வழக்கமான விளையாட்டுகள் இருவருக்கு மேல் ஆடுவதாக இருக்கும்.
இதனால் ஒற்றுமையுடன் சேர்ந்து விளையாடுவது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுப்பது போன்ற பண்புகள் வளரும். ஆனால் வீடியோ கேம்ஸ் விளையாடும் போது, குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகொள்ள வேண்டும், அடுத்தவர்களைக் காயப்படுத்தியாவந்து வெற்றியடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி விடும்.
மேலும், அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படும் குணமும் வளரக்கூடும். உடலைக் களைப்படையச் செய்யும் விளையாட்டுகளில், குழந்தைகளின் உடல் தசை வலுப்படும், ரத்தம் சுத்திகரிக்கப்படும். ஆனால் வீடியோ கேம் குழந்தையை ஒரே இடத்தில் உட்கார வைத்து, சோம்பல் தன்மையை அதிகரிக்கும்.
வீடியோ கேம்ஸ் அதிக நேரம் விளையாடும்போது, அந்த கேம்ஸில் வரும் கதாபாத்திரமாகவே குழந்தைகள் தங்களை மாற்றிவிடுகிறார்கள். இதனால் உங்கள் குழந்தைகள் அவர்களின் தனித்துவத்தை இழந்து, தாங்கள் விளையாடும் விளையாட்டில் வரும் கதாபாத்திரங்கள் போன்று ஆடை அணிந்து கொள்வது அவர்களைப் போன்றே செயல்படுவது என்று இருந்து…
தனக்கான ரசனை, விருப்பம் ஆகியவற்றைத் தொலைத்துவிடுகின்றனர். உடல் சார்ந்த விளையாட்டுகள் விளையாடும்போது தான் உங்கள் குழந்தையை ஏதேனும் ஒரு வகையில் யோசிக்க வைக்கும்! ஆனால் எலக்ட்ரிக் கேம்ஸில் சிந்தனைக்கு இடமே இல்லாமல் மூளையை மழுங்கச் செய்துவிடும்.
இதனால் அவர்கள் புதிது புதிதாக யோசிக்கும் தன்மையை இழந்து விடுகின்றனர். மேலும். வேறு வேலைகள் செய்யும் போதும், படிக்கும்போதும்கூட அந்த விளையாட்டின் எண்ணங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும். இதனால் மனதை ஒருமுகப் படுத்த முடியாமல் போய்விடுகின்றார்கள்.
மாணவர்களின் உடல்நலத்தையும், அறிவையும், மனநலத்தையும் மழுங்கடிக்கச் செய்யும் டிஜிட்டல் விளையாட்டுகளை விட்டுப் பிள்ளைகள் எவ்வளவு தூரமாய் இருக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவர்களுடைய வாழ்க்கை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் அமையும்!
ஆக விளையாட்டு என்பது உடலைக் களைப்படையச் செய்து, மனதை சிந்திக்கத் தூண்ட வேண்டும். அதை செய்யத் தடையாக இருக்கும் எந்த ஒன்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு எதிரானதே! ஆனால் இஸ்லாமிய மார்க்கம் என்பது வீணான விளையாட்டுகளையும், எந்த ஒரு பலனையும் மனித சமூகத்திற்கு தராத விளையாட்டுகளையும்… விளையாட சொல்லி சொல்லவும் இல்லை! அதை ஆதரிக்கவும் இல்லை!
Source : unarvu ( 18 : 08 : 18 )