மதுவால் மாயும் உயிர்கள்: தீர்வு என்ன?
மதுவால் மாயும் உயிர்கள்: தீர்வு என்ன?
தமிழகத்தில் எத்தனையோ தற்கொலை மரணங்கள் நிகழ்கின்றன, ஆனால் தற்போது நிகழ்ந்த ஒரு சிறுவனின் தற்கொலை மரணமானது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஆளும் ஆட்சியாளர்களின் மூடத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட சிறுவன், தனது இறுதிச் சடங்கை கூட தன் தந்தை செய்யக் கூடாது என்று கூறியுள்ளான். ஏனெனில் தந்தை மது குடிப்பதால்தான் அந்த மகன் தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை என்பது தவறான முடிவுதான். ஆனால் நன்கு படித்து வளர வேண்டிய சிறுவன் தன்னைத் தானே சாகடித்துக் கொள்கிறான் என்றால் அவனின் தந்தையின் மதுப் பழக்கம் அந்த மகனை எப்படி பாதித்திருக்கும்?
மது அருந்துபவர்களை ஊக்குவிப்பவர்களாகவும், அதனை ஆதரித்து அதன் மூலமாக பொருளாதார இலாபத்தைப் பெறக்கூடியவர்களாகவும் தான் ஆளுகின்ற ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் உள்ளனர். ஒரு காலத்தில் மதுவின் வாடையே இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது, மதுவால் அழியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மதுவை ஒழிப்பதற்காக நாம் தான் களத்தில் இறங்க வேண்டும். மதுவிற்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தை நாம் செய்ய வேண்டும், அதன் மூலமாக மதுவின் கேட்டிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் … இன்ஷா அல்லாஹ ……!