031. மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை
மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை
பதில்
ஆயிரம் மடங்கு சிறந்தது.
மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது.
1190 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
அற்விப்பவர் : அபூஹுரைரா (ரலி)
இந்தப் பள்ளியில் தொழுவது அதிக நன்மையைப் பெற்றுத்தரும் என்ற கருத்தில் இதை சொர்க்கத்தின் பூஞ்சோலை என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
2463 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْمَازِنيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரி (ரலி)
மஸ்ஜிதுந் நபவீ சிறப்புக்குரிய பள்ளியாக இருப்பதால் அதிக நன்மையை நாடி இந்தப் பள்ளிக்கு பயணம் புறப்பட்டு வரலாம்.
1189 حَدَّثَنَا عَلِيٌّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَسْجِدِ الْأَقْصَى رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எந்தப் பள்ளிவாசலுக்கும் சிரத்தை எடுத்து பயணம் மேற்கொள்ளக் கூடாது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)