மண்டை ஓட்டின் மூலம் வெளியான முஸ்லிம்களின் தியாகம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

மண்டை ஓட்டின் மூலம் வெளியான முஸ்லிம்களின் தியாகம்

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று ஆசிரியர்கள் தாம் கொண்ட கொள்கைப்படியும் தான் சார்ந்த சமூகத்தைச் சிலாகித்தும் தாங்கள் விரும்பிய கோணத்தில் எழுதியுள்ளனர் என்றால் அது மிகையாகாது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முஸ்லிம்களின் பங்கு சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தது. லட்சக்கணக்கான முஸ்லிம்கள் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்து இரத்தம் சிந்தி கிடைத்தது தான் இந்திய சுதந்திரம் என்ற வரலாற்று உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டது. இருந்தாலும் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியாது என்பார்கள். அதே போல் அவ்வப்போது கிடைக்கும் தடயங்களும், ஆய்வுகளும் முஸ்லிம்களின் தியாகங்களை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது.

வட இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி வெடித்த பிறகு தான் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் தீவிரமானது என்று தான் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இதை நாம் நமது பள்ளிக்கூட பாடங்களிலும் பயின்று வருகின்றோம். ஆனால் உண்மை அதுவல்ல வெள்ளையர்களுக்கு எதிராக நடந்த வேலூர் புரட்சிதான் (க்ஷிமீறீறீஷீக்ஷீமீ விutவீஸீஹ்) இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்! வேலூரில் 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் நாள் புரட்சி நடந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த இந்தப் புரட்சி வரலாற்றில் பதிவு செய்யப்படவே இல்லை! காரணம் இதை முன்னெடுத்து நடத்தியவர்கள் முஸ்லிம்கள். , திப்பு சுல்தான் தான் இதன் பின்னணியில் செயல்பட்டவர். கி பி 1798 ஆம் ஆண்டு முதல் கி பி 1805 வரை பிரிட்டானிய ஆளுநராக வெல்லஸ்லி இருந்து வந்தார்.

இவர் கொண்டு வந்த துணைப்படைத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்த இந்து மற்றும் முஸ்லிம் வீரர்கள் கிழக்கிந்திய கம்பெனியாரின் படைகளுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். மதப் பாகுபாடு இல்லாமல் சகோதர ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்ட இந்து, முஸ்லிம் வீரர்களைக் கண்டு மனம் பொறுக்காத அதிகாரிகள் அவர்களது ஒற்றுமையைக் குலைக்கும் வண்ணம் பன்றிக் கொழுப்பும், பசுக்கொழுப்பும் தடவப்பட்ட உறைகளுடன் கூடிய தோட்டாக்களை அவர்களுக்கு வழங்கினர். அந்தத் தோட்டாக்களைத் துப்பாக்கியில் லோடு செய்து வெடிக்க வைக்க வேண்டுமென்றால் வீரர்கள் அவற்றைப் பல்லால் கடித்து இழுத்து உறையைக் கிழிக்க வேண்டியதாக இருந்தது. மாட்டுக் கொழுப்பு பூசப்பட்டது என்று இந்து சிப்பாய்களும் பன்றித் தோலால் செய்யப்பட்டது என்று முஸ்லிம் சிப்பாய்களும் அந்த ஆணைக்குக் கட்டுப்பட மறுத்தனர்.

1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் நாள் இரவு இரண்டு மணிக்கு வேலூர் கோட்டையில் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள் சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம், சுபேதார் ஷேக் ஹுசைன் போன்றோர் தலைமையில் சிப்பாய்கள் அணிவகுத்து ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றனர். ஓர் சில ஆங்கிலேய அதிகாரிகள் மட்டுமே உயிர் தப்பினர். புரட்சியில் சிறு பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. இதனால் தான் பீரங்கி தொழில் நுட்பத்தின் தந்தை திப்பு சுல்தான் என அறியப்படுகிறார். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களின் கொடி இறக்கப்பட்டு திப்பு சுல்தானின் கொடி ஏற்றப்பட்டது. ஆனால் இந்தக் கிளர்ச்சி உரிய கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் வழி நடத்தப்படாத காரணத்தால் மிகுந்த துயரத்தில் முடிந்தது. மறு நாளே தென்னகத்தின் வேறு பல பகுதிகளில் இருந்த ஆங்கிலப் படைகள் ஒன்று திரட்டப்பட்டு வேலூருக்கு அனுப்பப்பட்டு வேலூர் புரட்சி ஒடுக்கப்பட்டது.

இந்தப் புரட்சியின் போது மட்டும் 3000 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். வேலூர் புரட்சி நடந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு தான் வட இந்தியாவில் சிப்பாய் புரட்சி மூண்டது. மீரட் சிப்பாய் புரட்சி குறித்து நாம் அறியாத பிற செய்திகளும் உள்ளன. சிப்பாய் புரட்சியில் பங்கேற்றுக் கைதான இந்திய வீரர்களைப் பிடித்துச் சென்ற ஆங்கிலேயர்கள் பிறகு அவர்களை என்ன செய்தார்கள்? என்று யாருக்காவது தெரியுமா? கொல்லப்பட்ட வீரர்களின் தலையை எடுத்து வைப்பது பழங்குடியினரின் மரபாக இருந்தது இதையே ஆங்கிலேயர்களும் செய்தனர், ஜெயித்தவர்கள் தோற்றவர்களைக் கொன்று அவர்களது மண்டை ஓடுகளைச் சேகரித்து தங்களது வெற்றிக்கான அணிவகுப்பில் வைத்துக் கொள்வார்கள். அப்படித் தான் சிப்பாய் கலகத்தில் தீரத்துடன் பங்கேற்ற நமது இந்திய வீரர்களின் தலைகளும் வெட்டப்பட்டு வெற்றிக்கான அடையாளமாகக் கருதப்பட்டு லண்டன் கொண்டு செல்லப்பட்டன.

போரின் பொது கொல்லப்பட்டவர்களின் தலைகளை இனாமாக வழங்கி மகிழ்ந்தனர். மீரட்டில் நடைபெற்ற சிப்பாய் புரட்சி தற்போதைய பாகிஸ்தானிலுள்ள சியால்கோட் வரை பரவியது, இதில் ஆலம் பேக் தலைமையில் இருந்த படை ஐரோப்பியர் படையைத் தாக்கினர். இதில் 7 ஐரோப்பியர் கொல்லப்பட்டனர். இதன் பின் வந்த அயர்லாந்து படையினரால் ஆலம் பேக் கொல்லப்பட்டார், காஸ்டெல்லோ என்றவர் ஆலம் பேக் அவர்களுடைய மண்டை ஓட்டை எடுத்து சென்றார். 1963 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள தி லார்ட் க்லைட் பப் (ஜிலீமீ லிஷீக்ஷீபீ சிறீஹ்பீமீ றிuதீ) அறையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த மண்டை ஓட்டை ஆங்கிலேயர்களின் வரலாற்றைக் குலைத்ததற்கான ஆதாரமாகக் கருதினர். பின்னர் மண்டை ஓட்டின் கண்ணில் அருகே எழுதப்பட்ட வாசகத்தை வைத்தே அது சிப்பாய் புரட்சியில் தலைமை வீரராக இருந்த ஆலம் பேக் என தி லார்ட் க்லைட் பப் உரிமையாளர்களுக்கு தெரியவந்தது.

அவர்கள் மண்டை ஓட்டை அவரது குடும்பத்திற்கு நாடு கடத்த விரும்பினர் ஆனால் அவர்களால் செய்ய இயலவில்லை. 2014 ஆம் ஆண்டு தி லார்ட் க்லைட் பப் உரிமையாளர்கள் தெற்காசிய வரலாற்றை எழுதி வரும் கிம் வாக்னெர் அவர்களைத் தொடர்பு கொண்டு மண்டை ஓட்டை எடுத்து அவரது குடும்பத்திற்கு ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர். கிம் வாக்னெர் மண்டை ஓட்டை வீட்டுக்கு எடுத்து வந்து இதைக் கடந்த ஆண்டு ” ஓர் போராளியின் வாழ்வும் சாவும் – ஆலம் பேக் அவர்களின் மண்டை ஓடும்” – ஆய்வறிக்கை வெளியிட்டார். மக்களுக்குத் தெரியப் படுத்துவதால் மட்டுமே அவருடைய குடும்பத்தாருக்கு கொண்டு செல்ல இயலும் என நம்புவதாக கூறினார். ஆக இது போல் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் தியாகம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.

Source : unarvu 23/01/2018